Monday, December 5, 2011

கண்ட நாள் முதல் ....

                   Daily நாம பாக்குற நம்ம வீட்டு ரோஜா செடி திடீர்னு ஒரு நாள்  ரொம்ப அழகா  கண்ணுக்கு தெரியும்....இத இன்னும் கிளு கிளுப்ப சொல்லனும்ன டெய்லி பாக்குற அதே புருஷனோட மூஞ்சி ஒரு நாள் செம smarta தெரியும்.    
             அதே மாதிரி தான் ஒரு 3..4.... படத்துல பார்த்திருந்தாலும் திடீர்னு நம்ம பிரசன்னா பச்சக் நு மனசுல ஒட்டிகிடது என்னமோ க.நா.மு la தான் .எனக்கு தெரிஞ்சி இந்த படமே சில பேருக்கு தெரியாது .ஆனா எனக்கு எவ்வளோ வாட்டி பாத்தாலும் அலுக்காத என்னோட movie listla க.நா.மு ஒண்ணு . இந்த படத்துல பெருசா கதைனு எல்லாம் ஒன்னும் இல்ல சின்ன வயசுல இருந்து சண்ட போடுற ரெண்டு பேர் விதி வசத்தால friends  ஆகி அப்புறம் மொள்ள மொள்ள அவங்களுக்கு குள்ள  காதல் எப்படி மலருது அது தான் outline.
              இந்த படம் என்னோட fav journo ROMCOM la   வர்ற படம் எந்த செண்டிமெண்ட் சிக்கலும் இல்லாம இது ஒருcandy floss movie. infact  இந்த படத்துல வர ஒரு ஒரு dialogue um  எனக்கு மனப்பாடம் .


            வெட்டி கத பேசாம விஷியத்துக்கு வருவோம் நம்ம பிரசன்னா இருக்கனே ...........இந்த படத்துல sooo sweet!!!!!!!!!!! நம்ம தெரு பையன் மாதிரியே இருப்பன். இந்த மாதிரி பசங்கலாம் சென்னைல எங்க பா இருக்கானுங்க எங்க தெருலயும் 4....5.....  இருக்கு ஆனா ஒண்ணும் சுமார் ராகம் கூட கெடையாது. கொஞ்சமா வளந்த  தடி, ஒரு semi formal look,எப்பவுமே கண்ணுல ஒரு குறும்பு தனம் ஆனாலும் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு ஒரு முகம் nu பாக்கவே பிரசன்னா நல்ல இருப்பான் இந்த படத்துல பிரசன்னா பண்ணது ஒண்ணும் மஹா பெரிய அவதார புருஷ வேஷம் எல்லாம் இல்ல,ஆனா தனக்கு என்ன role  குடுக்க பட்டதோ அத தன்னால நல்ல decent  பண்ண முடியும்னு he has proved.The way he emotes  in climax wow man இன்னொரு வாட்டி கேக்கவேக்கற scene.Actually எனக்கு ரொம்ப பெரிய கொழப்பம் என்னன்னா எனக்கு பிரசன்னா வ புடிக்குமா இல்ல  moviela வர கிருஷ்ணா வ புடிக்குமான்னு . ஈகோ,கோவம்,பொறாம,காதல், frienship,கெஞ்சல்,கொஞ்சல்,கேலி,கிண்டல்,அழுகனு கிருஷ்ணா கிட்ட இல்லாதது எது இது சினிமாகாக எழுதப்பட்ட ஒரு charactera  இருந்தாலும் ஒவ்வொரு பொண்ணும் காதலான அடைய ஆச படுற ஒருத்தன் தான் கிருஷ்ணா .எனக்கு கிருஷ்ணா வேற பிரசன்னா வேறையா  பாக்கவே முடியல.. கிருஷ்ண மாதிரி ஒரு lover atleast  ஒரு friendadhu வேணும்னு நான் ரொம்ப யோசிச்ச நாள் எல்லாம் கூட இருக்கு.அதுலயும் climaxla  பிரசன்னா  பேசுற dialogues  " உன்ன விட்டுட்டு போனும்ன நான் எப்பவோ போய் இருப்பேனே..... உன்  கூடவே இருக்கணும்னு தானே இருக்கேன் ,நீ இல்லாம வாழ முடியாதுனு தானே இருக்கேன் ".இந்த ஒரு படத்துக்காகவே பிரசன்னா என் மனச கவர்ந்த heros listla  வந்துட்டான்.இந்த படிக்கறவங்களுக்கு ரொம்ப கொழப்பம இருக்கும் இது என்ன படத்த பத்தின பதிவா, இல்ல பிரசன்னா பத்தின பதிவா, இல்ல அந்த படவா கிருஷ்ணாவ பத்தின பதிவான்னு எனக்கே புரியல.May be  எனக்கு புடிச்ச கிருஷ்ணாவா இருந்த பிரசன்னாவ பத்தின பதிவுனே  வெச்சிகோங்க...........