Wednesday, October 19, 2011

நினைவில் நின்றவை 70's - 1

நாம எவ்வளோ படம் பாத்தாலும் நம்ம மனசுக்குள்ள பச போட்ட மாதிரி ஒட்டிகறது சில படங்கள் தான் அதுவும் அந்த படங்கள  ரெகார்ட் தேயற அளவுக்கு பாத்தாலும் நமக்கு அலுக்கவே அலுக்காது அப்படி எனக்கு புடிச்ச ரெகார்ட் தேஞ்ச சில பல  70's la  வந்த  படங்கள பத்தி பாப்போம்...... ஏதோ நான் பாப்போம் நு சொன்ன ஒடனே நான் என்னமோ அறிவு ஜீவி திரை பார்வை மதன் மாதிரியோ இல்ல, சினிமா விமர்சனம் அருமையா எழுத கூடிய என்னோட பிரண்ட் மகேஷ் மாதிரியோ நு நினைக்காதீங்க சாமி சத்தியமா எனக்கு அதெல்லாம் சுத்தமா தெரியாது நமக்கு தெரிஞ்ச சினிமா ஜில் ஜங் ஜக் expansion  உங்களுக்கே தெரியும் சூப்பர் படம்  - ஓகே படம்  - படு மொக்க படம் அவ்வளோ தான். நான் பார்து இன்னும் பாத்துகிட்டு இருக்கற சில படங்களை பற்றி...



எதிர்நீச்சல்(1968) :
இந்த படத்த பத்தி மகேஷ் கிட்ட ஒரு poste எழுத சொன்னேன் அந்த அளவுக்கு நான் இந்த படத்தோட செம luver .  நாகேஷ்,முத்துராமன்,ஜெயந்தி,மேஜர் சுந்தர்ராஜன்.. பல அருமையா நடிகர்கள் நடிச்ச நம்ம KB  direct பண்ண படம் இந்த படத்த எப்பவும் போல முதல் முதல்ல நம்ம பொதிகைல தான் பாத்தேன் அப்புறம் பல தடவ இந்த படத்த rajashri.com la பாத்து இருக்கேன். இந்த படத்த பாக்கும் பொது ஒரு positive energy  என்னக்குள்ள create ஆகும். சீர்காழி கோவிந்தராஜன் குரல்ல " வெற்றி வேண்டுமா போடு பாரடா எதிர்நீச்சல்" பாட்ட கேக்கும் பொது கண்டிப்பா ஒரு தெம்பு பிறக்கும் .


காசே தான் கடவுளடா(1972):
தேங்காய் ஸ்ரீநிவாசனோட The best performance nu  தான் சொல்லணும் முத்துராமன், ஸ்ரீகாந்த்,லக்ஷ்மி,மனோரம்மா,வெண்ணிறாடை மூர்த்தி, சுருளி ராஜன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்ச படம்.அதே அதே சபாபதே  nu  பணத்த கொள்ளியடிக்க அவங்க போடுற plans   எல்லாம் செம hilarious இந்த படத்த எழுதி  direct பண்ணது சித்ராலய கோப்பு ,he is one of the best writer in tamil cinema.

காசி யாத்திரை(1973):
இந்த படம் அதிகம் பிரபலம் இல்ல VK ராமசாமி ,மனோரம்ம,ஸ்ரீகாந்த்,சுருளி ராஜன்,சோ நடிச்ச படம் இந்த படத்துக்கு என்னமோ ஸ்ரீகாந்த் தான்  official heroஆனால் படத்தோட உண்மையான hero & heroine  நம்ம VKR & மனோரம்மா தான். மனோரம்மா இந்த படத்துல dual role  பண்ணி இருப்பாங்க. ஒரு சந்நியாசி எப்படி ஒரு நாடக காரி மேல ஆச பட்டு அவங்க சதி கும்பல்ல சிக்கி அவஸ்த்த படுறாரு அது தான் இந்த படத்தோட  main plot.இந்த  நடககாரிய படத்துல  வர மனோரம்மாவோடbody language extremely superb....

வா ராஜா வா:
 இந்த அப்படம் எந்த வருஷம் release  ஆச்சுனு எனக்கு தெரியல அப்போ master பிரபாகரன் ரொம்ப famous  கிட்ட தட்ட எல்லா படத்துலயும் பிரபாகரன் இருபாரு. எல்லா child artist போல அதிகப்ரசங்கி தனம் இருந்தாலும் ஒரு innocence  இருக்கும் பிரபாகரன் கிட்ட.... இந்த படத்தோட ஹீரோ master  தான் மகாபலிபுரத்துல tourist guidea இருக்கற சின்ன பையனுக்கு ஒரு சிற்பி friend .அந்த சிற்பி கிட்ட இருக்கற ஒரு கல்லுல செதுக்க பட்டு இருக்கும்  பழமொழிகள் அந்த பையன் வாழ்க்கைல அனுபவ படமா நடக்கும் இது தான் படத்தோட கதை சுருக்கம்.நான் இந்த படத்த school படிக்கும்  பொது பாத்தேன், so என்ன இந்த பட ரொம்ப attract பண்ணிடுச்சு  A.P Nagarajan direct பண்ண படம் இது.

கலாட்ட கல்யாணம்(1968)
சிவாஜி கணேசன் முதல் முதல ஜெயலலிதா கூட  ஜோடி போட்ட படம் . 4 பொண்ணுங்களுக்கு பையன் பத்து வெச்சிட்டு தானும் தன் காதலிய கை புடிக்க பாடுபடும் hero va பத்தின கதை.இந்த படத்துல சிவாஜி,நாகேஷ்,முத்துராமன்,கோபாலகிருஷ்ணன்,தங்கவேலு,சோ அந்த காலத்துல வந்தmulti start cast movie.இது ஒரு typical comedy entertainer ரகம்.

நான்:
ரவிச்சந்திரன்,ஜெயலலிதா,நாகேஷ்,மனோரம்மா நடிச்ச படம். பல கோடி ருபாய் சொத்துக்கு வாரிசு யார்  nu நடக்கற போட்டி தான் படம்.மனோகர் , நாகேஷ்,ரவிச்சந்திரன் இந்த மூணு பெரும் அந்த சொத்துக்கு போட்டி போடுறாங்க யார் உண்மையான வாரிசு கண்டுபுடிக்கறது தான் கதை நிறைய comedy கொஞ்சம் thrilling  nu படம் ரொம்ப நல்லாவே போகும் .

ரங்கா விலாஸ்:
VK ராமசாமி நடத்திடு இருக்கற lodgela  காசே குடுக்காம ஜெய்ஷங்கரும்  நாகேஷ் தங்கி lodege inmprove பண்றேன் பேர்வழி lodegela raid  நடக்க கரணம் ஆகிடுறாங்க . Police kitta சிக்கி lodge  கை  விட்டு போய்.. மனமும் போய்  நாகேஷையும் ஜெய்  yavum தேடு தேடு  தேடுறாரு இதுக்கு நடுவுல நாகேஷ் ஒரு பொண்ண காதலிச்சு கல்யணம் பண்ணி சந்தர்ப்ப சூழ்நிலையால தலைமறைவு வாழக்க வழராறு . நாகேஷ் செத்த மாதிரி  ஆவி ரூபத்துல வந்து VKR.... மிரட்டறது..... இந்த கூத்துக்கு நடுவுல  ஜெய் வாணிஸ்ரீ yin காதல் nu  இதுவும் செம comedy கலாட்ட

பாமா விஜயம்:
இந்த படத்த பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியது இல்ல அளவுக்கு அதிகமான ஆசை எவ்வளோ தப்பு  ரொம்ப அழக சொல்லி இருப்பாரு KB ஒரு நடிகையின் ( ராஜஸ்ரீ)  வரவுக்காக தகுதிக்கு மீறி செலவு செய்யும் மகன்கள் ( மேஜர் சுந்தர்ராஜன் , நாகேஷ், முத்துராமன் ) பேராசை படும்  மருமகள் ( ஜெயந்தி ,காஞ்சனா, சௌகார் ஜானகி ) குடும்பத்தை கட்டி காக்கும் மாமனாராக  பால்லையா ரொம்ப கருத்துள்ள நகைச்சுவை படம் .

இது மாட்டும் இல்ல இன்னும் எவ்வளவோ படங்கள் காதலிக்க நேரம் இல்லை,ஆயிரம் பொய்,அத்தையா மாமிய, நீ , உத்தரவின்றி உள்ளே வா,சுமதி என் சுந்தரி,ஊட்டி வரை உறவு,கண்காட்சி nu பல படங்கள் ஒவ்வொரு படத்த பாக்கும் போதும் ஒவ்வொரு ஞாபகம். ஞாபகத்த மீறி செம குஷி மனசுக்குள்ள வந்துடும். 











Tuesday, October 18, 2011

season greetings...

சின்ன வயசுல இருந்து நம்மள பெரிய leavela attract  பண்ற   festival na அது தீபாவளி தான்..தீபாவளி nu  சொன்ன ஒடனே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் excite ஆகிடுவோம்.நம்ம lifestyle  காலத்துக்கு ஏத்தா மாதிரி design deisgna   எப்படி மாறி இருக்குங்கறதுக்கு பெரிய example நம்ம கொண்டாடுற festivals ye  வெளிப்படுது.சின்ன வயசு தீபாவளி ஞாபகம் எல்லாம் காலைல எண்ணெய் தேச்சி குளிக்கணும் அப்புறம் புது டிரஸ் போட்டுகிட்டு அப்பா வாங்கி தந்த அந்த ரெண்டு டப்பா கம்பி மத்தப்ப பூர கொளுத்தி முடிச்சிட்டு அவசர அவசரமா ஏதோ  சாப்டுட்டு எதுத்த வீடு பசங்க என்ன வெடி வேடிக்கரங்க  நோட்டம் விட்டு அபப்டியே TV முன்னாடி போய் ஒக்கரவேண்டியது..... சாயங்காலம் பாட்டி வீட்டுக்கு போய் அங்க சித்தி வாங்கி வெச்சி இருக்கற வேடிங்கள கொஞ்சம் கொளுத்திட்டு திரும்பவும் டிவி பாக்க ஓட வேண்டியது.எங்க தெருவுல யார் வீடு முன்னாடி அதிக பட்டாசு கொளுத்துன பேப்பர் இருக்கோ அவங்க தான்  மாஸ் அதுக்கு பெரிய சண்டையே நடக்கும் ..... எங்க அப்பா 2 டப்பா கம்பி மத்தாப்பு  2 டப்பா புஸ்வானம் தவிர ஒன்னும் வாங்கி தரமாட்டரு,so நான் lam போட்டிக்கு qualifye  ஆகா மாட்டேன் :(


    College படிக்கும் பொது தீபாவளி அப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா தீவாளி ஆச்சு அப்போ வேடில பெரிய interest ஒண்ணும் இல்ல ஆனா புது dress நிறைய வாங்கணும்  supera stitch பண்ணனும்.... லேட்டா தூங்கி எழுந்து நல்ல சப்பட்டு டிவி ya  விட்டு நகர கூடாது nu ....மினுக்கரதுல தான் ஆர்வம் ஜாஸ்தி இருந்துச்சு....அப்புறம் நமக்கும் ஒரு புண்ணியவான் வேல குடுத்தானா...... அது தான்  24 * 7 வேலை ஆச்சே so நல்ல நாள் கேட்ட நாள் nu  ஒண்ணு கிடையாது தீவாளி ku எண்ணெய் தேச்சி குட குளிக்க மறந்து shift shift nu ....ஆபீஸ் ஜன்னல் வழியா  shotsa பாத்துடே வேல பாக்கவேண்டியது தான்.... என்ன ஒரே அறுதல் தீவாளி அன்னைக்கு வேல பாத்தா 1000  lifestyle giftvoucher  கிடைக்கும் நல்ல சாப்பாட்ட miss பண்ணுவேனே தவிர மத்த படி தீவாளி ஒண்ணும் பெருசா impact create  பண்ணால...அதுக்கு அப்புறம் வந்த தீபாவளிகள்  படு மொக்கை ராகம்.....ரொம்ப நாளைக்கு அப்புறம்  தீவாளி excitementoda வந்து இருக்கு வெறும் புது  dresskaga மட்டும் இல்ல...... dichu ku  விவரம் தெரிஞ்சி அவ மத்தாப்பை ரசிக்க ஆரம்பிச்ச அப்புறம் வர தீவாளி இது.....நேத்து  shopping போயிட்டு  வரும் பொது சதீஷ் போலம்பினது தான் ஞாபகம் வருது "வெறும் 300 ரூபாய்க்கு புது  dress எடுத்து 2 டப்பா வெடி வாங்கி வெடிச்ச பொது இருந்த சந்தோஷம் இப்போ 5 ஆயிரத்துக்கு dress எடுத்து  10 ஆயிரத்துக்கு வெடி வெடிக்கும் பொது கிடைக்கல lifela simplicitye போய் வெறும் complexity  தான் மிஞ்சுது" .சந்தோஷமா இருந்த பண்டிகை வெறும் சடங்கா மாறி ரொம்ப வருஷம் ஆகுது அது மீண்டும் சந்தோஷமா மாற நான் வேண்டிக்கறேன்.......wishing all you & your family a happy diwali.....

அழகி

அழகி போட்டில   ஒரு அழகிய எப்படிselect  பண்றாங்க?  இந்த கேள்விய நாம models  கிட்ட கேட்டா வெறும் அழக அடிப்படைய வெச்சி select  பண்றது இல்ல.....last roundla  பதில் சொல்ல அறிவு ரொம்ப முக்கியம் nu  சொல்லுவாங்க வெறும் அழகு அறிவு மட்டும் இருந்துட்டா  அவ அழகி ஆகிடுவாளா??
     இப்போ எனக்கு எதுக்கு இந்த doubts nu நீங்க கேக்குறது எனக்கு புரியுது சத்தியமா நான் அழகி போட்டிக்கு போகற அவளுக்கு மனசாட்சி இல்லாதவ இல்ல...
பின்ன வேற என்ன ____________ இந்த doubts nu  கேக்குறீங்க தானே உங்க mind voice nan cathch பண்ணிட்டேன்......recenta நான் பார்த்த ஒரு புகைப்படம் என்ன ரொம்ப வெறி ஆகிடுச்சு
  ஒரு பெண் எப்போது  பெண் ஆகிறாள்? பாக்யராஜ் stylea கேட்ட என்னோட பதில் " அவள் தாய்மை அடையும் பொது தான் " பொண்ணுங்களுக்கு naturala ve oru motherly feeling உண்டு ஒரு அக்கா தன தம்பி கிட்ட எவ்வளோ தான் சண்ட போட்டாலும் எதாவது ஒரு தருணதுல அவ அம்மாவா அவன அரவணாச்சி இருப்பா.....அதுவும் அவ pregnaneta  இருக்கும் பொது அவளுக்கு எவ்வளவு மாற்றங்கள் உடல் அளவு இருந்தாலும் அத எதையுமே பொருட் படுத்தாம ரொம்ப சந்தோஷமா பெருமையா தான் தாய் ஆகா போறோம்னு மனசுக்குள்ள கொண்டடுவா....சாதர்ண படித்த ....படிக்காத பொண்ணுங்க எல்லாருமே இப்படி தான். ஆனா ஒரு உலக அழகி தன்னோட  baby bumpa மறைக்க அரும்பாடு படுறா...

recent timesla.....உலக அழகி ஐஸ்வர்யா ராய் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் தன்னோட வயத்த துப்பட்டாவால் மறைச்சிகிட்டு தான் போறா ... எம்மா ஐசு முழு புசணிக்காய சொத்துல மறைக்க முடியாதுனு உங்களுக்கு தெரியாதா??? நீங்க என்ன 16  வயசு பொண்ணா சிக்கிரம உண்டாகிட்டா அதன் பொண்ணு வெக்க படுதுன்னு சொல்ல இல்ல நீங்க கர்ப்பமா இருக்கறது யாருக்குமே தெரியாத???? இல்ல தெரியக்கூடாத.... இல்ல இதனால உங்க cinema carrer post pregnancy   பதிக்க படுமா???? உங்க baby bumpa  மறைக்க எல்லா உரிமையும்  உங்களுக்கு உண்டு அனால் தாய்மையின் அடையாளத்தை மறைக்க விரும்புவது ஒரு அழகிக்கு அழகா????


உங்களோட சம கால  போட்டியலரா கருதப்படும் சுஷ்மித சென் ரெண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தான் போகும் எல்லா இடங்களுக்கும் அவர்களை பெருமையுடன் அழைத்து செல்கிறார்...நாங்க உங்கள தத்து எடுத்து வளக்க சொல்லல  ஆனா தான் முறையா பெத்துக்க போற குழந்தையோட baby bumpa  நீங்க மறைகரதுக்கான காரணம்  என்னனு சத்தியமா எனக்கு  புரியல நடிப்புல பல சிகரம் தொட்டவங்களா நீங்க இருக்காலம்  ஆனால் என்னை பொறுத்த வரை நீங்கள் அழகி அல்ல....

Friday, October 14, 2011

கல்யாணம் .....?????,,,,,,,

ஒருத்தன் கஷ்டம் இன்னொருத்தனுக்கு சந்தோஷம் அது எதுல பொருந்துமோ இல்லையோ கல்யாணத்துல நல்லாவே பொருந்தும்.அவன் கடைசியா சிரிக்கறது அப்போ தான் அதுக்கு அப்புறம் அவன் பொழப பாத்து ஊரே சிரிப்பா சிரிக்கும் இதுக்கு நடக்குற கூத்தும் கும்மாளமும் இருக்கே அப்பா சொல்லிமாளாது.
                   என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கல்யாணம் நாளே  செம ரகள தான் . Shopping போறதுல ஆரம்பிச்சி  invitation குடுக்கறதுல தொடங்கி உனக்கு தான் first invitation  குடுக்கறேன்னு பல பேர்கிட்ட கப்சா விட்டு மக்க மனுஷங்கள ஒன்னு தேரட்டி கல்யாணம் பண்ணி முடிக்கறதுக்குள்ள சப்பா கண்ணுமுழி பிதிங்கிடும்.
 North sidela கல்யாணம் நைட் ல தான்  நடக்கும் so நம்மளோட invitationla முகுர்த்த டைம் பார்த்த ஒடனே நம்ம  northiee பிரெண்ட்ஸ்  கேக்குற first  கேள்வி" god damn how do  u manage for an 6 am wedding"? அவனுக்கு எங்க தெரியும் நம்ம புள்ளையாண்டான் தூக்க கலகத்துல கல்யாண பொண்ண இல்ல அவங்க அம்மாவானு பாக்காம கெட்டிமேள சத்தம் கேட்ட ஒடனே rightla திரும்பி கைக்கு கிடைக்கற  கழுத்துல தாலிய கட்டுவான்னு
         நம்ம ஊரு கல்யாணத்துல தான் எவ்வளோ variety நாடார்,முதலியார்,தேவர்,கோனார்,அய்யர், அய்யங்கார் , பிள்ளை ( இதுல சைவம் அசைவம்  வேற) தெருவுக்கு தெரு இருக்கற பிள்ளையார் கோவில விட caste & sub caste ஜாஸ்தி .ஒவ்வொரு casteukum  ஒவ்வொரு மாதிரி சடங்கு இதுல லவ் marriagena பையனும் பொண்ணும் செத்தாங்க . 
          எனக்கு என்னமோpersonala  கல்யாணம் நாளே குஷி ஆய்டுவேன் என்னமோ ஒரு ஜாலி மூட் வந்துடும் நல்ல டிரஸ் பண்ணிக்கலாம் நகை போட்டுக்கலாம் அத விட முக்கியம் நம்ம எல்லா சொந்த பந்தத்தையும் பாக்கலாம்  .
               எனக்கு ரொம்ப புடிச்ச கல்யாண culturena  அது அய்யர் வீட்டு கல்யாணங்கள் தான் 3    நாள் கல்யாணம் நடத்தி கொண்டடிடுவாங்க.நிறைய சாஸ்திரம் சம்பிரதாயம் இருந்தாலும் 3 நாள்  கல்யாணத்துல இருக்கற குஷி கொண்டாட்டம்... விரதத்துல start பண்ணி ஊஞ்சல், காசி யாத்ரா,அப்புறம் கண்ணியதனம் , விளையாடல்.... கட்டுசாதம் nu முடிக்கற வரைக்கும் ஒரே கலர்புல் தான்.மொத்ததுல எந்த caste  கல்யாணம்னாலும்  sight அடிகரதுல ஆரம்பிச்சி சண்ட வரைக்கும் கல்யாணத்துல நடக்குற எல்லா விஷயமும் தமாஷ் தான்.............infact  ரொம்ப தமாஷ் ....

Thursday, October 13, 2011

PKT நினைவலைகள்

PKT nu சொன்ன ஒடனே நீங்க ஏதோ தாஜ் மஹால் இல்ல திருமலை நாயக்கர் மஹால் நினைசிடதீங்க சென்னை ல எங்க ஆபீஸ் முதல் முதல்ல ஆரம்பிச்ச இடம் தான் PKT ( prince kushal towers).சென்னை ல இருகறவங்களுக்கு பழைய அலங்கார் தியேட்டர் நு சொன்ன தான் புரியும்.... பாக்க கொஞ்சம் பூத் பங்களா மாதிரி இருந்தாலும் எங்க மனச விட்டு நீங்காத பல இனிமையான  நினைவுகளுக்கு காரணம் PKT.
                    PKT ku வரும் பொது எனக்கு சங்கீதாவையும் அவளுக்கு என்னையும் தவிர வேற யாரயும் தெரியாது சென்னைல அப்போ தான் , எங்க ஆபீஸ் தொடங்கின நேரம் அதுனால எங்க mainframes ku 6th floor allocate பண்ணி இருந்தாங்க வெறும்  25 பேர் தான் இருப்பாங்க அந்த முழு floorlaiyum .புது ஆபீஸ் புது கம்ப்யூட்டர் nu  எங்க காலம் கொஞ்சம் நல்லாவே போச்சு.அப்புறம் தான் புதுசு புதுசா ஆளுங்க ஹைதராபாத்ல இருந்து வந்தாங்க எல்லாரும் சென்னை வாசிகள் so எங்களுக்கு ஒரு gang set ஆச்சு சொல்லி வெச்சா மாதிரி எல்லாரும் நைட் ஷிப்டுல இருப்போம்.நைட் ஷிப்டு நாளே எரிச்சல் தொல்லன்னு இருந்த எங்க லைப் செம கலர்புல்ல மாறினது இந்த  timela தான்.



பார்கவி,ஸ்ரீமதி,நான்,சங்கீதா,சரண்யா, ராஜா,ஜெகன்,ராம் பிரகாஷ்,சதீஷ்,திவ்யா நாங்க எல்லாம் ஒரே  platformla வேற வேற accountla  வேல பாத்தோம. அட்சய பாத்திரம் எப்படி அல்ல அல்ல குறையாதோ அதே மாதிரி எங்களுக்கு பேச கதை மட்டும் குறையவே குறையாது .இவ அவன் கூட போன கதைல இருந்து....... 4th floorla   ஆவி இருக்குன்ற கத வரைக்கும் மெகா சீரியல் தோத்துடும் எங்க கிட்ட.
 எங்க gangla கொஞ்சம் வயசானவர் na அது ராம் பிரகாஷ் தான் ஆனா ரொம்ப ஆலதியான ஆள்னாலும் அவர் தான். தான் இருக்கற இடாத எப்பவும் கலகலப்பா வெச்சிக்கணும் நினைக்கற ஆசாமி.ராமோட terror parte அவர் விடுற குறட்டை தான் ......ஒரு தடவ நானும் ஸ்ரீமதியும் ஏதோ ஒரு திராகுல்லா படம் பாத்துட்டு இருந்தோம் வழக்கம் போல நைட் ஷிப்டு தான் மனுஷன் sterio effectla terrora  விட்ட குறட்டைல அலறி அடிச்சி நானும் அவளும் படத்த  offe பண்ணிட்டோம்..P.S இதுல  4th floorla ஆவி இருக்குனு  ஒரு கத வேற உலாவிட்டு இருந்துச்ச.


   PKT மறக்க முடியாததுக்கு இன்னொரு காரணம் தலப்பாகட்டு பிரியாணி எங்க ஆபீஸ்கு oppositela  ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி கட இருக்கும்.  எனக்கு தெரிஞ்சி அங்க சாபுட்டா மாதிரி வேற எங்கயும் பிரியாணி நான் சாப்டுல....  9 மணிக்கு பிரியாணி அப்புறம் ஒரு சின்ன  system check அப்புறம் ஒரு இங்கிலீஷ் த்ரில்லர் திரும்பவும் ஒரு  system check அப்புறம் நல்ல தூக்கம் ,அலாரம் வெச்சி  5 மணிக்கு எழுந்து அவசர அவசரமா மறுபடியும் ஒரு  final check அப்புறம் cabla ஏறி வீட்டுக்கு போய் சேர வேண்டியது தான்.

      PKT oda இன்னொரு முக்கியமான plus point na  அது location தான் இந்த பக்கம் ஸ்பென்சர் அந்த பக்கம் சத்யம் theatre  பின்னாடி பீச் nu  எங்கள சுத்தி  ore entertainment தான்.நானும் சதீஷும் லவ் பண்ணிட்டு இருக்கும் பொது பீச்ல கால் வைக்காம வீட்டுக்கு போனது இல்ல, ஆபீஸ்ல  break போட்டு சத்யம்ல படம் பாக்க போனது ச்பென்செர்ஸ்ல window shopping nu PKT ya    சுத்தி நிறைய ஞாபகங்கள்

    வெறும் ஆட்டம் பாட்டம்  இல்லாம வாழ்க்கையோட பல நல்ல விஷயங்கள் நடந்தது அங்க தான் முதல் apprasial  , முதல் rating , என்னோட ஊடல் ,கூடல் ,காதல், கல்யாணம் எல்லாமே......கடந்த காலத்த நினைக்கறதே ஒரு சுகம் அதுலயும் இனிமையான நினைவுகள் தந்த  PKT ya பத்தி அசை போடுறதே ஒரு தனி சுகம்.....




Wednesday, October 12, 2011

என் ஊர் - மயிலாப்பூர்

எல்லாருக்கும் தன்னோட சொந்த ஊர்னா ஒரு தனி பாசம் உண்டு  எனக்கும் தான்,அமாம் என்னோட சொந்த ஊர் எது? வேற எது நம்ம மயிலாப்பூர் தான்.நம்ம மக்களுக்கு மயிலாப்பூர் அப்படின்னு சொன்ன ஒடனே ஞாபகம் வரது மாமிஸ் தான் ஏன்பா மயிலாப்பூர் ல மாமிங்க மட்டும் தான் இருக்காங்களா? சரி அதா விடுவோம். நான் ரசிச்ச ரசிக்கற மயிலாப்பூர் பத்தி எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை அது இப்போ இங்க உங்களுக்காக .
                       சென்னைல எங்க இருக்கீங்கனு?  கேட்டு அதுக்கு மயிலாப்பூர் னு சொன்னாலே ஒரு தனி கிரேடு தான் . மயிலாப்பூர் is cultural hub of chennai . சென்னைல ரொம்ப traditional   ஆனா இடம் நா அது திருவேல்லிகேணி & மயிலாப்பூர் ஆனா திருவேல்லிகேணி மாதிரி ரொம்ப கச்ச கச்ச னு மயிலாப்பூர் இருகாது கொஞ்சம் காத்தோட்டமா அருமையா இருக்கும் .


mylaporela கபாலீஸ்வரர் கோவில விட அங்க இருக்கற டிபன் கடைங்க ரொம்ப famous தெருவுக்கு ஒரு டிபன் கடை இருக்கும் எல்லா அருமையா ஐயர் வீட்டு கை  மனத்தோட இருக்கும் .


          


             கோவில சுத்தி நாலு மாட விதி, சென்னை மாதிரி ஒரு மெட்ரோ நகரத்துல இன்னும் மாட வீதி,  கோவில் தெப்ப குளம் னு இருக்கறது மயிலாப்பூர் ல மட்டும் தான் nu  நினைக்கறேன். பங்குனி மாசம்  கபாலிக்கு நடக்குற உற்சவம் ரொம்ப famous அதுல கடைசி நாள் அறுபத்தி மூவர் திருவிழா தமிழ் நாடு முழுக்க பரிச்சியம். என்னோட நவராத்திரி ஞாபகம் எல்லாம் எங்க மாட வீதில நடக்க கூட  இடம் இல்லாம கொலு பொம்மைங்க விக்கும் அதா பாக்கவே பெரிய கூட்டம் கூடும் .
            என்னோட friends கிட்ட இல்லாத ஒன்னும் என் கிட்ட இருந்ததுன அது big time exposure to tamil culture. சத்யம் தேட்டர் இருக்கற அதே மயிலாப்பூர் ல பஜன சமிதி இருந்தது தான். மார்கழி மாசத்துல கலர் கலர் கோலத்துக்கே விடிய காலைல போட்டி போட்டு எழுந்துப்போம்.

 மயிலாப்பூர் ல  எங்க வீடு ரொம்ப பெருசா இருகாது ரயில் பெட்டி மாதிரி நீட்டமான தெருவுல தான் வீடு அனா எதிர்த்த வீடு மாமி பக்கத்துக்கு வீடு அக்கா, கோடி வீட்டு அத்தானு தான் இன்னும் பழகறோம் இந்த மாதிரி ஒரு அன்நோநியத்த  சொல்ல வார்த்தை இல்ல......குடு குடுபகாரன் முதல் டப்பா சீடி கடை வரைக்கும்  பழைய சென்னையோட அடையாளங்கள் இன்னும் மாறாம இருக்கு.
                   இன்னொரு மயிலாப்பூர் specialna அது மயிலாப்பூர் festival  எல்லா வருஷமும் jan 1st week  நடக்கும் sundaram finance  நடத்துற festival .Its is to preserve & celebrate our culture.4  நாள் மயிலாப்பூர் கல கட்டும் பாடு கச்சேரி, பரதநாட்டியம் , டிராமா , food stalls, கைவினை பொருட்கள் nu  சரவணா store விளம்பரத்துல சினேஹா சொல்லற மாதிரி எக்கச்சக்க சக்கம்.



மயிலாப்பூர் ல கபாலீஸ்வரர் கோவில் மட்டும் இல்லாம காரணீஸ்வரர்,மல்லேஸ்வரர் , வாலீஸ்வரர் , தீர்தபாளிஸ்வரர் ,வெள்ளிஸ்வரர், விருபக்ஷீஸ்வரர் னு ஏழு ஈஸ்வரர் கோவில் இருக்கு அது மட்டும் இல்லாம கேசவ பெருமாள் , மாதவ பெருமாள் னு வைணவ தங்கலங்களும் சாந்தோம் சர்ச், மசூதி னு கோவில் நெறைய இருக்கற இடம் .



மயிலாப்பூர் வெறும் கோவில் கோலம் மட்டும் இல்லாம நிறைய entertainment quotient  உள்ள ஒரு இடம் books  படிக்க, நிறைய  arts கத்துக்க எல்லா விதமான accessibility um    உள்ள ஒரு இடம் 
       
         பொதுவா இங்க பொறந்த அடுத்த பிறவி கிடையாது னு சொல்லுவாங்க ஆனா அடுத்த பிறவி இருந்தாலும் இங்கயே பிறக்கணும்.மயிலாப்பூர் a ரசிக்கணும்!!!

Monday, May 10, 2010

My Madurai Trip...

Summer vacation : Asusual this time too my vacation was to Madurai.as my chithi resides there we often go there, to be honest my first long train journey was to madurai in 2003. From then we constantly go to madurai..now and then.This time it was bit special as i went to madurai with Deshe.This is her first train journey.This vacation there was big group to join  us amma,chithi,chithappa,nandu,abi,hari me n deshe.It was pathetic travel from here to madurai as we went in the morning train it was damn hot n sweaty... each n every time i reach madurai i feel that i belong to that place and whenever i leave that place i dnt feel like cuming to chennai... 1 reason that im attached with madurai is Meenakshi.I feel that watever problem i have the moment i enter into her temple itz all gone.This trip i wuld say it is a temple tour rather than a summer vacation.........oh my god we visited so many temple..first day we arranged a cab n went to tiruparang kundram.. 2nd day we went to the famous meenakshi temple...1 day was rest.4th day we visitied nearly 10 temples pillaiyaar patti,thirumogur,thirukoshtiur,vairavan patti,thiruthalinadhar,kundrakudi oh god the list goes on......It was a gud spiritual tour and me n deshe enjoyed it a lot...in travellign from one place to another...No matter where we travel if we are with our loved ones...It was a heartfilling trip to spend sum quality time with my whole family after a longggggggggggg time. Luv u all