Thursday, November 3, 2011

correctana தப்பு

                       மனைவி  அமைவது மட்டும் இல்லங்க friends  அமையறதும் கடவுள் குடுத்த வரம் .நாம நல்ல friends select பண்ணனோம் நாம தப்பிச்சோம் இல்ல அவ்வளோ தான் நாம காலி அழிஞ்சோம் . Freinds  கூட சேந்து தான் இவன் குடிக்க கத்துகிட்டான் அவன் கூட சேந்து தான் இவன் ரொம்ப ஊர் சுத்துறான் நு சொல்லற அம்மா ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி. இப்போ யாரும் யாரையும் கெடுக்கறது இல்ல அவங்க அவங்கலவே தான் தன்னோட பாதைய select பண்றாங்க. அப்புறம் என்னப்பா நல்ல friends  கெட்ட friends  நு கேகுறீங்களா.
                          Luvers குள்ள சண்டன்ர பேர்ல நடக்குற comedya  விட  friends குள்ள நடக்குற கூத்துக்கள் ஜாஸ்தி.அதுல பாதி சரியான மொக்க விஷியங்கள்.எப்பவுமே நல்லா திண்டு மாதிரி இருக்கற என்னோட தங்கச்சி நல்லா ஒடம்பு இலச்சி போய் இருந்தா . என்ன நித்யா இப்படி  எலச்சிட எனக்கும் அந்த  diet plana சொல்லேன் நானும் கொஞ்சம் எலைக்குறேன் சொன்னதுக்கு," நான் சொல்லுவேன் ஆனா நீங்க யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா சரி சொல்லு  எதுக்கு இவ்வளோ  build up தரன்னு சொல்லி கேட்டா எனக்கும் என்னோட friendsukum  சண்ட அதுல சாப்டாம இருந்து தான் எலசிட்டேன் சொன்ன எனக்கு செம கடுப்பு ஆயிடுச்சு freinds கூட பேசாம இருந்தா சாப்ட கூடாத..... என்ன ஒரு லூசு தனம் இது.தன்ன தானே வருத்திக்க வெக்க கூடிய எந்த ஒரு relationshipum useless  தான் nu என்னோட அபிப்பராயம்.
                            வெறும் காதல்ல மட்டும் poseesiveness இல்ல infact friendshipla தான் ரொம்ப ஜாஸ்தி.... இவ எனக்கு Hi சொல்லல, என் பிறந்த நாளைக்கு first wish  பண்ணால, இன்னைக்கு என் கூட வராம அவ கூட போயிட்டா இந்த மாதிரி அல்ப விஷியங்கள் பல.இந்த கருமம் possessivenessa  பத்தி பேச ஆரம்பிச்சா அதுக்கு தனி poste  எழுதலாம் அதா விடுவோம்.எனக்கு எப்பவுமே friends ராசி கெடையவே கெடையாது.நான் நல்லா ஒருத்தர் கூட mingleஆயிட்டே வருவேன் திடீர்னு எதாவது பிரச்சன ஆயிடும் இல்ல அவங்க  வேற ஸ்கூல் போய்டுவாங்க, நம்ம கூடவே ஒட்டுன்னிங்க மாதிரி இருக்கறது எதுவும் நமக்கு ஒத்து வராது.இது ஒரு பக்கம் இருக்க என்னோட இன்னொரு ராசி என்னன்னா........ நான் எப்பவுமே  தப்பான friendsa  தான் தேடி போய் நட்ப்பு வேச்சிப்பேன் எல்லாம் என் கெரக நேரம்.தப்பான friends nu  சொன்ன ஒடனே நீங்க தண்ணி, தம் nu  நெனைக்காதீங்க.சில பேர் நம்ம கூடவே இருந்துட்டு நமக்கே குழி பறிப்பாங்க அனா நம்ம முன்னாடி இந்த பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருப்பாங்க.ஆனா இந்த மாதிரி ஆசாமிங்க எதுக்கு நமக்கு நல்லா  freinds மாதிரி நடிக்கணும் அது தான் நம்ம மனசுக்குள்ள ஓடுற கேள்வி பதில் இல்லாத கேள்வி.எனக்கு இந்த மாதிரி பல கசப்பான அனுபவங்கள் இந்த மாதிரியான freinds  மூலமா  sorry ஆசாமிங்க  மூலமா நடந்து இருக்கு. 
                             பேர் சொல்ல விரும்பாத என்னோட கூட படிச்ச friend  எனக்கு அடுத்த roll number அவ...... இதுனாலையே  நாங்க நல்லா freinds ஆனோம்னு தான் சொல்லணும் அடிப்படைல அந்த பொண்ணும் நானும் chalk & cheese characters  ஆனா ஏனோ எனக்கு அவல ரொம்ப புடிக்கும் may be  அவளோட அந்த அமைதியான குணமா கூட இருக்கலாம்.இப்படி  அடுத்தடுத்த இருக்கற roll numberla ஒரு 7  பேர் நல்லா friends  ஆனோம் .நாங்க 7 பெற இருந்தாலும் எனக்கு என்னமோ அவல மட்டும் தான் ரொம்ப புடிக்கும் எப்பவும் போல அவளுக்கும் என்ன மட்டும் தான் புடிக்கணும் லூசு மாதிரி நானும் அப்போ அப்போ நெனைப்பேன் ஆனா என்ன பெத்தத தவிர என்னோட அம்மா.... அப்பா.... வேற எந்த பாவமும் செய்யாததுனால அந்த புண்ணியத்துல நான் என்னையே  அப்போ அப்போ self analyise பண்ணிப்பேன்.அதுனால ரொம்ப லூசு தனமாthink பண்ணாம கொஞ்சம் தப்பிச்சேன்.ஆனா எனக்கு வந்த பிரச்சன possessiveness  இல்ல, நான் யார ரொம்ப விரும்பி நேனோ அந்த பொண்ணு என்ன பத்தி எங்க gang friends கிட்டயே தப்பு தப்பா சொல்லி இருக்கறது பின்னாடி தான் எனக்கு தெரிய வந்துது.அவ நல்லா நேரம் இது எல்லாம் எனக்கு தெரிய வந்த பொது நாங்க காலேஜ் முடிச்சி இருந்தோம்.இல்லனா மட்டும் நான் என்ன கிழிச்சி இருப்பேன்னு கேக்குறீங்களா, ஒன்னும் கிழிக்க முடியாது தான்.ஆனா  அவ ஏன் என்ன பத்தி தப்பு தப்பா எல்லார் கிட்டையும் சொன்னானது தெரிஞ்சிக்கலாம்ல.இது மட்டும் இல்லாம என்ன பத்தி எப்படி மத்தவங்க கிட்ட சொன்னாலோ அதே மாதிரி அவங்கள பத்தியும் என் கிட்ட தப்பு தப்பா சொல்லி இருந்தா.அவ ஏன் அப்படி செஞ்சான்னு எங்களுக்கு இது நாள் வரைக்கும் தெரியல நாங்களும் அவ கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க விரும்பல எனக்கு என்னமோ அவ என்னோட முதுகுல குத்தினா மாதிரி இன்னும் சின்ன வலி இருக்கு.இது ஒரு பெரிய பண ஏமாத்தோ, இல்ல பித்தல மாத்தி வேலையோ இல்ல ,ஆனா என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு நம்பிக்கை  துரோகம் தான்.
                       இப்படி  இவ ஒருத்தி மட்டும் இல்ல இன்னும் பல பேர் கிட்ட இப்படி  தான் நான் செம அடி வாங்கி இருக்கேன் ஒரு வேல அவங்களோட இயல்பே அது தானோ, நான் தான் தப்பானவங்க கூட சகவாசம் வேச்சிகிட்டேனோ அப்படியே இருந்தாலும் என்ன புடிக்கலன புடிக்கலன்னு சொல்லிடு போய் இருக்கலாம் அதா விட்டு எதுக்கு என் கூட  இருந்துகிட்டே எதுக்கு எனக்கு குழிப்பரிக்கணும். நாம எப்பவுமே கைல இருக்கற வைரத்த விட்டு கூழன்கல்ல பொருக்கரதுல தான் ஆர்வம் காட்டுவோம் அதே மாதிரி சில நண்பர்கள் நம்ம கூடவே இருப்பாங்க கூடவே பயணிப்பங்க ஆனா நம்ம மனசு  அவங்கள ஒருபோதும் கண்டுக்கவே கண்டுக்காது.இன்னைக்கு அந்த மாதிரி என்கூடவே இருந்து நான் கண்டுக்காம இருந்தா அந்த சில நண்பர்கள் தான் இப்பவும் என்கூட இருக்காங்க.எனக்கு எந்த பிரச்சனையும் குடுக்காம .
                         என்ன பொறுத்த மட்டில் நானா தேடிபோற எந்த ஒரு  relationshipum எனக்கு workout ஆனது இல்ல அதுனாலயே யாரையாச்சும் புடிச்சே இருந்தாலும் ஒரு Hi யோட முடிச்சிக்கறேன். நம்மளோட சாப்பாடு மட்டும் இல்ல நமளோட  friendsum நம்ம கூட இருக்கணும்னு விதிக்கப்பட்டவங்க தான் நம்ம பயணத்துல கொஞ்ச தூரம்னாலும்  வராங்க மத்தவங்க எல்லாம் தடம் தெரியாம காணாம போய்டுறாங்க.

Wednesday, November 2, 2011

சின்ன பூ .....

ரொம்ப நாலா எனக்கு புடிச்ச நடிகைய பத்தி எழுதணும் யோசிச்சிட்டே இருந்தேன் எப்படி எழுதினாலும் அது மகேஷோட "ஆஷா கேளுன்னியோட " inspiration ஜாஸ்தி இருந்துச்சு. Cha இது நமக்கு சரி பட்டே வராதுன்னு விட்டுட்டேன் . சரி கொஞ்சம் try  பண்ணி தான் பாப்போமே யோசிச்சேன் இதோ உங்களுக்கு இதுல எங்கியாச்சும் ஆஷா கேளுன்னி post  ஞாபகம் வந்த அதுக்கு நான் பொறுப்பு இல்லப்பா.....



                                எல்லா perioldlaiyum ஏதோ ஒரு நடிகையோட ஆதிக்கம் தல தூக்கி இருக்கும் அப்போ மினால் மாதிரி ஒரு புது முகம் அறிமுகம் ஆவாங்க. அந்த புதுமுகத்துக்கு நேரம் நல்லா இருந்தா பெரிய நட்சத்திரமா ஜோளிப்பங்க .இப்படி அம்பிகா, ராதா, நு தமிழ் சினிமா குட்டை பாவாடைல மூழ்கி இருக்கும் பொது தான் அந்த மின்னல்  நதியான்ர பெர்ல வந்துச்சு.
                            எனக்கு நதியா விருப்பம் ஆனது பூவே பூச்சுடவா படத்துல தான் . யாருக்கு தான் அந்த படம் புடிக்காது . அந்த படத்த நான் பாத்தது  என்னவோ ஸ்கூல் படிக்கும் பொது தான். அத பாக்கும்  பொது ஒரு படம் differenta  எடுத்து இருக்காங்கனு மட்டும் புரிஞ்சிது .அந்த படம் எடுத்த location  ஆகட்டும், இல்ல ஹீரோ வே இல்லாம ஒரு படம், அதுவும் துரு துரு நு ஒரு பொண்ணு 4 பசங்களோட சைக்கிள் ஓடிட்டு jollya  பாக்கவே ரொம்ப refreshinga  இருந்துச்சு .மாநிறமா  இருந்தாலும் அழகான முகம் அளவான உடல் வாகுனு 80's la  பசங்க  மனசுல நீங்கத எடம் புடிச்சவங்க நதியா .
                         ராதாவோட அதீத glamourla  சொக்கி இருந்த மக்களுக்கு நதியா ஒரு பெரிய refreshing breeze  தான் .பாக்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நதியா ஒரு துரு துரு சுட்டி பெண்ணா ரேவதிக்கு அப்புறம் மக்கள் மனசுல எடம் புடிச்சாங்க.இவங்களோட plus pionte   அவங்களோட dressing sense ..... Modern dress na அதுல கண்டிப்பா கவர்ச்சி இருக்கனும்ற எண்ணத துள் துள் ஆக்கினவங்க.  80's சோடா fashion iconu  தான் இவங்கள சொல்லணும்.
                    அந்த timela எங்க அம்மா வேல பாத்துட்டு இருக்கும் பொது நதியா வே ஒரு பெரிய brandam .நதியா பொட்டு, நதியா கம்மல், நதியா வளையல் நு அவங்களால பல plastic companies  வழ்துச்சு  nu  தான் சொல்லணும்.நதியா - சுரேஷ் ஒரு ஹிட் pairne  சொல்லலாம் they complimented each other well.ஹீரோஸ் ஜாஸ்தி dominate பண்ணிட்டு இருந்த timela கூட தனக்கு weight age  இருக்கற  rolesa பாத்து செலக்ட் பண்ணி நடிச்சாங்கலாம்.ஏதோ ஒரு பேட்டில படிச்சேன் மௌன ராகம் இவங்க நடிக்க வேண்டிய படமாம் dates  இல்லாததுனால ரேவதிக்கு போயிடுச்சாம்.
                நம்ம த்ரிஷா மாதிரி தொடர்ந்து கலை சேவை புரிஞ்சி ரசிகர்களே அம்மா பொது உன் மூஞ்சிய எவ்வளோ நாள் தான் பாக்குறதுன்னு சொல்ல வெக்காம தன்னோட peakla she retired .கொஞ்ச படமே நடிச்சாலும் கச கச நு இல்லாம neata  நடிச்சிட்டு போய்ட்டாங்க .நதியா தனக்கு எப்படி ஒரு sytle  வெச்சி இருந்தாங்களோ அதே மாதிரி தான் நடிக்க வரும் போதே தன்னுக்கு  ஒரு காதலன் இருக்காறுனும் அவர தான் கல்யாணம் பண்ண போறேன்னும் publica starting of the careeryare சொன்ன ஒரே நடிகை எனக்கு தெரிஞ்சி இவங்க தான் நு நெனைக்கறேன். திகட்ட திகட்ட glamour  இருந்த காலத்துல நல்லா கண்ணியமா நடிச்சிட்டு தென்றல் மாதிரி போனாங்க.யாருப்பா அந்த நடிகை நு கேக்குற அளவுக்கு 80's நடிகைகள் எல்லாம் ஊதி போய் இருக்கும் பொது நதியா இன்னும் காலேஜ் பொண்ணு மாதிரி சிக்குன்னு இளமையோட இருக்காங்க .
             எனக்கு personala நதியாவ புடிக்க காரணம் அவங்க கிட்ட இருந்த sytle quotient.She lights up the screen .அவங்க கிட்ட naturalave ஒரு youthfulness இருக்கு.she changed the perception of being modern without being vulgar .I hope & pray that  she gets more powerful roles & have beautiful life .

மின்பிம்பங்கள் .....

இந்த வார்த்தைய கேட்ட ஒடனே எனக்கு ஞாபகம் வரது எல்லாமே கே.பலச்சந்தேரோட சீரியல் தான். இந்த சீரியல் culturea முதல் முதல்la start  பண்ணது எனக்கு தெரிஞ்சி கே.பி தான் . எனக்கு DDla  வந்த எந்த ஒரு சீரியல் lum பெருசா ஞாபகம் இல்ல உடல் பொருள் ஆனந்தி ,மேல் மாடி கலி தவிர அத கூட  நான் பத்தது எல்லாம் இல்ல என்னோட class mates  சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் . அப்புறம் கே.பி மெதுவா கேபிள் டிவி அதாவது அப்போ வந்த சன் டிவி கு தாவின பொது அவர் எடுத்த மோதல் சீரியல் "கையளவு மனசு " .
                           இந்த சீரியல் startingla  இருந்து முடியற வரைக்கும் ஒரு  episode குட தவற விடாம எங்க அம்மா பத்தது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு .இந்த சீரியல்  la புடிச்ச விஷியமே அதோட  title song தான்,அந்த பாட்டு ரொம்ப  catchya நல்லா இருக்கும் .அந்த drama la குடும்ப கஷ்டம் தாங்காம பசங்கல கீதா தத்து குடுக்கும் பொது எங்க அம்மா நீயும் சேட்டை பண்ண உன்னையும் இப்படி தான் தத்து குடுத்துடுவேன் நு சொல்லி என்ன பயமுறுத்தி இருகாங்க.... அதுல வர அந்த கடைசி குட்டி தீபிகா வ பாத்து நான் ஏன் இவ்வளோ அழகா இல்லன்னு ஏங்கி  வேற இருக்கேன்.அப்புறம் காதல் பகடை,ப்ரேமி nu நெறைய சீரியல் கே.பி productionsla இருந்து  வந்தாலும் என்ன மட்டும் இல்லாம தமிழ் நாட்டையே கட்டி போட்ட ஒரு சீரியல் சீரீஸ் na அது "மர்மதேசம்" தான்.


                           ஆரம்பத்துல ரகசியம் nu தொடங்கி நெறைய பேரால பாக்கபடாத ஒரு ரொம்பவும் நல்ல சீரியல். நாங்க என்னமோ அது முடியற நேரத்துல இருந்து தான் பக்க ஆரம்பிச்சோம் ரொம்ப interestinga இருந்துச்சு .நம்ம ஊருக்கு சீரீஸ் மாதிரி type ரொம்ப ரொம்ப புதுசு அதுவும் ஒரு வித புது அனுபவம் தான் . இந்த சீரீஸ்  எல்லாமே மர்ம கதைகள் அதுனாலயே வியாழ கெழமை ஆனாலே கரெக்டா பாத்துடுவோம் .இந்த மர்மதேசம் சீரீஸ் la ரொம்ப ஹிட் நாடகம் na அது விடாது கருப்பு தான் . குதுரை ,கருப்பு,அரிவாள் வெட்டு, இதுக்கு நடுல துப்பறியும் பெண் ரொம்ப வித்தியாசமா எலாரையும் கட்டி போட்ட சீரியல் அது .விடாது கருப்பு வந்த பொது நான் ஒரு 4th std படிச்சிட்டு இருந்தேன் அதோட  விறு விறுப்பு புடிச்ச புரிஞ்ச எனக்கு அந்த split personality concept  கொஞ்சம் புரியல அப்புறம் அத rajshri.com la தேடி பத்த பொது I could understand it.
                        இதுக்கு நடுல teleflims nu  மினி சினிமா எடுத்தாங்க சன் டிவி, அப்போ அதுக்காக கே.பி எழுதி இயக்கினது தான் காதல் ஒன்று வாங்கி வந்தேன்.Ooty backdropla set ஆனா இது ஒரு romcom variety இதுல நடிச்ச அந்த அக்கா ,ஜெய் கணேஷ் கேரக்டர் அப்புறம் குட்டி தீபிகா இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு..... எவ்வளோ தேடியும் கெடைக்காத அந்த title song உள்ளபட எல்லாமே அருமை .                கே.பி சன் டிவ்க்கும் சண்ட வந்து அவர் ராஜ் டிவி  ku தாவி ஜன்னல் series, காசளவு நேசம்,ரமணி vs ரமணி - 2 nu  மாதிரி சீரியல் la நெறைய புது முயற்ச்சிகள் பண்ணிட்டு இருந்தாரு.ஜவ்வு மாதிரி  seriala இழுக்காம இரத்தின சுருக்கமா வாரம் ஒரு சீரியல் nu ராஜ் டிவி la  வந்துட்டு  இருந்துச்சு.இந்த, வாரம் ஒரு சீரியல் எனக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு மோகன் ராம்  & இதயம் நல்லெண்ணெய் சித்ரா நடிச்ச சீரியல் out and out comedy serial with good twist & turns .இவ்வளோ நல்ல சீரியல் குடுத்த கே.பி ye பின் நாள்ள அண்ணி ,சாந்திநிலையம் மாதிரி தலைவலி தர கூடிய மெகா சீரியல் பக்கம் போனது தான் வருத்தம்.ஒரு வேல கே.பி இந்த சீரியல் culturea start பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு தமிழ் நாட்டுல பல அம்பிளங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கெடச்சி இருக்குமோ,நம்ம வீடு எழவு வீட  மாறாம இருந்திருக்குமோ என்ன பண்ண விதி வலியது.....இது கே.பி எனென்ன சீரியல் எடுத்து இருக்காருன்னு கணக்கெடுக்க இல்ல கழுத தேஞ்சி கட்டெறும்பான கத மாதிரி தான் இந்த சீரியல் கதையும். கே.பி ஒன்னும் revolutionary  சீரியல் எடுக்கல ஆனா அதே நேரம் வீடே சேந்து ஒப்பாரி வெக்கற மாதிரி இப்போ வர மகா மட்டமான சீரியல் lum  நிச்சயமா எடுக்கல.இப்போ சீரியல் ra பேர்ல கண்ட கருமத்த எடுத்துகிட்டு இருக்கற ஒவ்வொரு  directorum தயவு செஞ்சி நான் மேல சொன்ன எதாச்சும் ஒரு  dramava  பாருங்க அப்புறம் நீங்க எல்லாம் குற்ற உணர்ச்சில direction பக்கமே வரமாடீங்க .

Tuesday, November 1, 2011

மழையே மழையே ......

 சென்னைல இருகறவங்களுக்கு smilea கொண்டுவர நெறைய விஷியங்கல்ல மழையும் ஒன்னு . ஏன்ற கரணம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல காஞ்சி போய் கெடக்கற எடத்துல நல்ல மழை பெஞ்சா சந்தோஷம் தானே.மழைனலே பல விதமான mixed reactionsa பாக்கலாம்  ஸ்கூல் காலேஜ் போறவங்களுக்கு leave nu ஜாலி ,அம்மா கு துணி காயாதுனு கவலை,வேலைக்கு போறவங்களுக்கு அய்யோ இந்த office ku இந்த climatela ya கேளம்பனுமேனு எரிச்சல் ,.இப்படி  பல emotions   மழையோட connect  ஆகி இருக்கும். எனக்கு மழைன ரொம்ப....... ரொம்ப......... ரொம்ப...... புடிக்கும் அதுவும் மழைல நெனையறதுன cha chance இல்ல.... மழைல நெனயறது யாருக்கு தான் புடிக்காது .மழைன்னு சொன்னாலே அதா ஒட்டி வர நியபகங்களுக்கு பஞ்சமே இருக்காது அதுல mostly  இனிமையான,happy memories  தான் இருக்கும் .
                      சின்ன வயசுல எல்லாரும் போல மழை வந்தா ஸ்கூல் லீவ் ஒரு பெரிய bedsheeta  பொத்திட்டு TV முன்னாடி ஒக்கந்துக வேண்டியது அப்போ அப்போ யாராச்சும் மழைல ஆட்டம் போடுறங்கலானு நோட்டம் விட்டுட்டு செஞ்சி வெச்சி இருக்கற பேப்பர் கப்பல தண்ணில மேதக்க விட்டுட்டு ஓட்டிடுவேன் .என்னோட சின்ன வயசுல மழை நாள்ல பஜ்ஜி எல்லாம் சாப்ட ஞாபகம் இல்ல சாயங்காலம் நல்ல சூடான டீ குடிச்ச ஞாபகம் தான் இருக்கு.
                            வளந்த அப்புறம் பெரிய மழை ஞாபகம் சொன்ன அது 2005 la வந்த பெரிய புயல் மழை தான். சென்னையே 3 நாள் அல்லோல பட்ட மழை அது....current cut  ஆகி இருட்டுலையே மூழ்கி இருந்துது சென்னை .அப்போ பாத்து தான் எங்க காலேஜ் ல  semester practicals  நடந்துட்டு இருந்துச்சு ,அன்னைக்கு Microprocessor practicals  எங்களுக்கா மழை வேற....practicals...  வேற exam இருக்குமா இருக்கதானே தெரியல நான் படிச்சு காலேஜ் வேற Govt college so போன் பண்ணலாம் எடுக்க மடங்க என்ன பண்றது தெரியாம எங்க  gang...  discuss பண்ணி ஒரு வழிய நாங்க காலேஜ் போறதுன்னு முடிவு பண்ணோம்.ரோடு எல்லாம் செம வெள்ளம் ஒரு பஸ் கூட இல்ல ஏதோ கெடச்ச பஸ்ல தாவி ஏறினா நம்ம ஊர் பஸ் நல்ல நாள்லயே நாயகம் இதுல மழைல கேக்கவா வேணும் .....ஒரு பக்கம் அப்படியே பேப்பர் கப்பல் மாதிரி சாஞ்ச வண்ணம்...... பஸ்ல ஆள் என்னமோ இல்ல இருந்தாலும் பஸ் லட்சணம் அப்படி கண்டக்டர் வேற இந்த மழைல எங்க போற பாப்பா காலேஜ் நு சொல்லிடு ஊர் சுத்த போரியனு கடுப்ப கெளப்பிட்டு இருந்தான் .
                   அங்க போனா நமக்கு முன்னாடி ஒரு  20 பேர் ஒகந்து இருக்காளுங்க ஒருவேள nighte  வந்து படுத்து இருபளுங்கலோ ஆனாலும் அவங்கலாம் ரொம்ப தான் sincere சிகாமணிங்க. ஒரு வழிய practicalsa முடிச்சிட்டு வீட்டுக்கு கேளம்பலம் நு கேளம்பின இந்த  பாழா போன மழை விட்ட பாடு இல்ல நாங்க தரமணி la இருந்து இந்திரா நகர் வழிய அடையாறு டேபோ வரணும் நடராஜா service  தான் .செம வெள்ளம் தெர்மாகோல் மாதிரி மேடந்துடே வந்தோம்.

                       எனக்கு பாட்டு இல்லாம மழை கெடையாது மழைல நெனஞ்சலோ ,இல்ல மழையே பாத்தாலோ நான் ஒடனே பாட்டு பட ஆரம்பிச்சிடுவேன் public placela இருந்தா  முணுமுணுக்கவாது செய்வேன்.அப்படி மழை பாட்டுனே நான் ஒரு  4-5  பாட வெச்சி இருக்கேன்.ex "மழை வருது மழை வருது குடை கொண்டு வா" , "மழையே மழையே இளமை  முழுதும் ","ஓஹோ ஓஹோ மேகம் வந்தது", "மழை மழை என் உலகத்தில வருகின்ற முதல் மழை" .....இப்படி கொஞ்சம் பெருசு.எனக்கு மழைல செய்ய புடிக்கும் விஷயங்கள் சிலது இருக்கு அதுல ஒன்னு ரெண்டு நான் செஞ்சும் இருக்கேன் .....உதரணத்துக்கு மழை பெய்யும் பொது பைக் ஓட்டவோ இல்ல பைக்ல பின்னாடி ஒக்காந்து போறதுன ரொம்ப பிடிக்கும்,அப்புறம் மிதமான சாரல் மழைல la train ஜன்னல்  seatla ஒக்காந்து  கிட்டு விகடன் படிக்க புடிக்கும் .முழுசா நெனஞ்சி ஈரம் கஞ்சும் காயமலும் இருக்கும் பொது டீ கடைல நின்னு டீ குடிக்க புடிக்கும்(bajji is default).அப்புறம் மொட்டை மாடில நின்னு மழைய ரசிக்கறது புடிக்கும்.மழை நாள்ல எவ்வளவோ சங்கடங்கள் இருந்தாலும் மழை nu சொன்ன ஒடனே நமக்குள்ள பொதஞ்சி போய் இருக்கற நம்ம குழந்தை தனம் கண்டிப்பா ஒருதடவையேனும் வெளிய வரும் நான் இப்போ மழைல நெனைய போறேன் :))

Thursday, October 27, 2011

அவ்விட தேசம் ...

நீங்க பாத்த அழகான இடம் எது  nu கேடீங்கன்ன எல்லாரும் சொல்லற listla கண்டிப்பா கேரளா  இருக்கும் .அமாம் நிச்சயமாக கேரளம் "Gods own country "  தான் . இந்தியாவோட சின்ன statea இருந்தாலும் அதோட இயற்கை எழில் கொஞ்சும் அழகு ku ஈடு இணையே இல்ல nu தான் சொல்லணும்.மலையாள பொண்ணுங்க எவ்வளோ அழகோ அதா விட பல மடங்கு  அந்த மண் அந்த ஊர் அவ்வளோ அருமை....
        நான் naturea  ரொம்ப ரசிக்க கூடிய ஆள் எல்லாம் இல்ல..... எல்லாரும் கேரளா அவ்வளோ அழகு ஆஹா ஓஓஹோ நு புகழ் பாட்டு பாடும் பொது அப்புடி என்ன தான்  pa இருக்கு அங்க ... அது என்ன himachal pradhesh மாதிரி பனி தேசமா என்ன? வெறும் புல்லு ....மரம் அதுக்கு இந்த  indha buildupa  nu தான் நானும் நெனச்சேன்...... ஆனா இப்போ அப்படியே  என்ன upside downa மாத்தினது ....மயக்கினது அவ தான். என்ன அவனு சொல்லறேன்னு பாக்குறீங்களா? எதாச்சு ஒன்னு அழகா இருந்த அது கண்டிப்பா பெண்ணா தானே இருக்கா முடியும்(i am not getting into mars vs venus conversation ) .
                காதல்,புகழ், மது, மாது, மாட்டும் போத இல்ல இயற்கை அதா விட பெரிய போத .இது போதும்னு சொல்லவே தோணாது இன்னும் இருக்கா nu தான் கேக்க தோணும்

          எனக்கு இயற்கைய ரசிக்க சொல்லி குடுத்தது என்னமோ நம்ம மலைகளின் இளவரசி ஆனா மாசு இல்லாத, மாற்றம் இல்லாத கடவுள கிட்ட பாத்த மாதிரி இயற்கைய கிட்ட பாத்தது  கேரளத்துல தான்.என்னோட முதல் கேரளா visit  நான் college படிக்கும் பொது மூணார் போனோம் familyoda மதுரைla இருந்து ஒரு tempo travellerla தான் போனோம். பயணம், அதுவும் மலை பயணம் ,,அதுவும் குடும்பத்தோட இத விட வேற என்ன பெரிய  enjoyment இருக்க பொது அதுவும் vacation timela.நாங்க மூணார் போய் சேரும் பொது கூம் இருட்டு பக்கத்துல இருக்கற ஆள் குட தெரியாத இருட்டு எங்க போறோம் எந்த எடத்துல தங்கி இருக்கோம்னு கூட தெரியல காலைல நாங்க தங்கி இருந்த room ku வெளில போய் பாத்தா..... பச்சை கம்பளம் விரிச்சா மாதிரி எங்க resorta சுத்தி T estate. மிதமான வெயில் ,மொகத்த தொட்டு போற குளிர் காத்து, எங்க பாத்தாலும் பச்சை போர்வை nu மூணார் ஒரு சொர்க்கம் .ஆனா என்னவோ எனக்கு மூணார் ஒரு kerala effecta தரவே இல்ல may be அது தேனி border  நாளாவோ என்னவோ.ஏதோ ஒரு மலைப்ரதேசத்துக்கு போன feel  தான் இருந்துச்சு .        
           அதுக்கு அப்புறம் கேரளா போறத பத்தி அதிகம் நான் யோசிக்கல.. 2010  aug la ஒரு சின்ன vacation போறதா  plan பண்ணோம் எங்க போறது nu  வரும் பொது நான் netla browse பண்ணி வயநாடு nu  கேரளா ல ஒரு எடம் இருக்கு அங்க போலாம் சொன்னேன், வயநாடு அதிகம் explore  பண்ணாத எடம் கேரளாla So எல்லாரும் அங்கேயே போகலாம்nu decide   பண்ணோம் . Geographically கேரளாவோட northla  இருக்கற ஒரு சின்ன district.வயநாடு.சென்னைல இருந்து கோழிகோடு வரைக்கும் trainla போய் அங்க இருந்து  tempo travellerla வயநாடு மலை ஏறினோம் .மலை nu சொன்ன ஒடனே நம்ம ஊட்டி இல்ல கோடை மாதிரி கற்பன பண்ணாதீங்க அந்த அளவுக்கு hairpin bends இல்ல  இங்க . மூணார் மாதிரி இல்லாம இந்த வாட்டி பகல்la மலை ஏறினோம். இளம் பச்சை செடிங்க , நல்லா ஓங்கு தாங்க வளந்து இருக்கற மரங்கள்.... பாதி எடத்த மூடி இருந்த mist மறக்கவே முடியாத பயணம் அது " i smelled the real flavour of kerala" இல்ல இல்ல  to be precise the real smell of nature.வாயனாடுல homestays  தான் ஜாஸ்தி நாங்க ஒரு 9 பேர் போனதுனால homestayla  தான் தங்கினோம் .அந்த property  இருந்த எடமே ஒரு சொர்க்கம் .சிராபூஞ்சி ku  அப்புறம் அதிக மழை பெய்யறது அந்த எடத்துல தான் .ஒரு மலை பிரதேசத்துல..... சுத்தி பச்சை பசேல்னு செடிக்கு....  நடுல இருக்கற  அழகான வீடு திண்ணைல ஒக்காந்து மழைய ரசிக்கறது எப்படி பட்ட கொடுப்பினை நான் தெரிஞ்சிக்கிட்டது அப்போ தான் .வாயனாடோட specialitye அதோட rawness  தான் ஏற்கனவே சொன்ன மாதிரி அதிகமா  மக்கள் புழங்காத எடம் இயற்கைய அதோட போக்குலயே விட்டு இருக்கற unexplored beautiful region.அங்க இருந்த ஒரு 4 falls ku  சரியான படிகட்டோ  இல்ல பாதையோ இல்ல trek பண்ணி தான் போகணும் .Falls nu சொன்ன ஒடனே குளிக்கற மாதிரி இருக்குமோ nu தான் நெனச்சோம் ஆனா எப்பவும் போல அங்க குளிக்க முடியாது ...அதிரம்பள்ளி மாதிரி பெரிய falls nu அத பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது . Fallsa  பத்த அந்த நொடி எனக்கு தோணுனது "இது தான்  da சொர்க்கம்" இந்த உண்மையான சந்தோஷத்த தொலைச்சிட்டு அல்ப விஷியத்துக்கு ஒடுரோமே nu. .

           மணிகணக்குல queuela நின்னு கோவில்ல சாமிய கிட்ட பாக்குற மாதிரி மணிகணக்கா trek பண்ணி அந்த  water fallsaiyum ஆதி வாசிகள் வாழ்ந்த குகைகளையும் பாத்தா பொது I felt i was tooo close to nature.Nature நமக்கு வெறும் மன அமைதிய மட்டும் தரல..... எத செய்யணும், எத செய்ய கூடாது நும்.... சில விஷங்கள அதோட போக்குலயே விடுறது தான் அழகுனும் சொல்லி கொடுக்குது .எனக்கு வாயனடுல சுத்தும்பொது பாசில் படத்துல பாத்த அந்த green scapes மாதிரியே இருக்கேன்னு தான் தோணுச்சு..... அட chai மக்கு... மாதிரி என்ன மாதிரி பாசில் படங்கள வாய் போலந்து பாத்த எடத்துல தான் இருக்கேன் nu அப்புறம் தான் ஓரச்சிது.வயநாடு நேத்து சமஞ்ச பொண்ணு மாதிரி ஒரு கன்னி தன்மையோட fresha  இருந்தது. என்னோட கவலை இன்னும் 5 வருஷம் அப்புறம் ஊட்டி கோடை மாதிரி இதுவும் குப்பை மேடா ஆகிட கூடாதுன்னு தான்.Modernisation & development ra பேர்ல அதோட அழக இந்த மனுஷங்க கெடுத்ததுட கூடாது
             வாழறத்துக்கு கொஞ்சம் காசு , அழகான கேரளத்து stylea ஒரு வீடு nu வாழ்க்கையோட பின் பகுதிய அர்த்தமுள்ளதா, என் மனசுக்கு புடிச்சா மாதிரி..... வயநாடு போல ஒரு மலைதளத்துல தான் கழிக்கணும் nu விரும்பறேன் . இயற்கைய நேசிக்கற இயற்கைய இன்னும் அனுபவிக்காத இயந்திர உள்ளங்கள் கண்டிப்பா போக வேண்டிய இடம் கேரளம் .இசையையும் இயற்கையையும் ரசிக்காத உங்கள்  உண்டோ ?என்ன பொறுத்த வரைக்கும் இந்த வயநாடு ஒரு வாழ்க்கை அனுபவம்.இது ஒரு ராஜா பாட்டு மாதிரி .....

Tuesday, October 25, 2011

முத்த நாயகன்

முத்த நாயகம் nu நன் சொன்ன ஒடனே சின்ன பாப்பா  la இருந்து பெரிய பாப்பா வரைக்கும் தெரிஞ்சி இருக்கும் நான் யார பத்தி ஜோள்ள போறேன் sorry சொல்ல .ஆமாம் நான் ton கணக்குல ஜொள்ளு விட்டது கமலஹாசன  பாத்து தான் . கமல் இவ்வளோ பெரிய  actor,அவ்வளோ பெரிய நடிப்பு ஞானி நான் இங்க அளந்து  உங்கள மொக்க போடா வரல அவர் எவ்வளோ பெரிய actora இருந்தாலும் எனக்கு கமல் பத்த ஒடனே தோணுற ஒரு விஷம் உஹ்மம்ம்ம்ம் அதாங்க  (பெருமூச்சு).மனுஷன் இந்த வயசுலயும் என்னமா இருக்கான் டா உஹ்மம்ம்மம்ம்ம்ம் இன்னொரு பெருமூச்சு.
                           இப்போ கமல் பத்தி இவ்வளோ ஜோள்ல்றேனே 2004 வரைக்கும் எனக்கு கமல் நாளே உவக் தான். எனக்கும் என்னோட school friends குஹா பிரியா,மஹா லக்ஷ்மி கும் நடுல சண்டையே நடக்கும் . கமல் என்ன பெரிய இவன..... ச்சே அவன் மூஞ்சியும் மொகரையும் அவ..... இவனு nu.... எல்லார் கூடையும் சுத்துறான் அப்படி எப்படி ஏக வசனத்துக்கு பேசுவேன் அவங்களும் ஈடு கட்டி வேலசுவங்க உனக்கெல்லாம் ரசனணு ஒன்னு இல்லவே இல்லd nu வச பாடுவாங்க.அப்படி இருந்த நான் ஒரே நாள்ல.... இல்ல.... இல்ல... ஒரே படத்துல தீவிர கமல் AC யா(fan கூட  இல்லங்க AC note the point) மாறினது எப்படி?
                   எல்லாம் அந்த விருமாண்டி படத்துல தான் start ஆச்சு.சித்தி படத்துக்கு book பண்ணி இருக்கேன்  சொன்னங்க படம் nu சொன்ன ஒடனே என்ன படம்னு  கூட கேக்காம அலைஞ்சி  கிட்டு ஓடினேன் பாத்தா அது உவக் கமல் படம் தலை எழுத்தென்னு தான் பக்க ஆரம்பிச்சேன்.ஆனா படத்துல flashback start ஆனா அப்புறம் வர கமல் la பாத்து அப்படியே வாய்ல இருந்து water falls  வருதுனு கூட தெரியாம அப்படியே ஒக்காந்து இருந்தேன்.அந்த படத்துல கமல் கிட்ட ஒரு ஆண்மை இருக்கும் ஒரு வீரம் இருக்கும் அதா விட எப்பவுமே ஒரு மெல்லிய கிறக்கத்தோட  கூடிய காமப்பார்வை இருக்கும்.Teenageவேற கேக்கவா வேணும் கமல் அபிராமி ku குடுத்த 14 kissaiyum  கண்ணுல வெள்ளகெண்ணெய் ஊத்திட்டு பாத்தேன் .அது வரைக்கும் fav heronu   யாருமே இல்லாத எனக்கு அன்னில இருந்து மனசுல பச்சக் போட்டு ஒட்டிகிட்டாறு  கமல்.

                  நான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சொல்லுவேன் என் கனவுல வந்த முதல் ஹீரோ கமல் தான் ,கனவுல வந்த கமல் என்ன பண்ணாறு? ஆமாம் கனவுல வந்து என்ன தியானமா பண்ணுவாரு பச்சக் பச்சக் nu முத்தம் தான் குடுத்தாரு.
அதுக்கு அப்புறம் தான் நான் கமல் நடிச்ச படங்கள பாக்க  start பண்ணேன்....துணிய  தூகிகொங்க d நெஞ்சிட பொது சொல்லற அளவுக்கு ஜொள்ளு விட்டு பாத்த படம்  ஏராளம் ......  விருமாண்டிக்கு அப்புறம் செம smart  கமல் na அது வேட்டையாடு விளையாடு sabba அதுவும் ரௌடிங்க கிட்ட கேட்டா சாதத்துட  nu சொல்லிட்டு அவர் பாக்குற பார்வை இருக்கே  man u r irresistible..joythika கிட்ட அவரோட பிளஷ்பக் சொல்லும் பொது ஹர்மோன்ஸ் ஏகத்துக்கு ஆட்டம் போடும்......அந்த கமலினி முகர்ஜி நானா இருக்க கூடாத ( இது கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர் தான் அனா அசை யார விட்டுது) ....

கஜினி அசின் எப்படி  நாலு கார் வாங்கின அப்புறம் தான் கல்யாணம் நு சொல்லுவளோ அதே மாதிரி ஒரு தடவையாது கமல் la நேர்ல கமிக்கரவன தான் கல்யாணம் பண்ணனும் நு ஒரு குறிக்கோளோட இருந்தேன் . நானும் சதீஷும் luvum பொது கமல் la காமிக்கறேன் காமிக்கறேன் nu என்ன ஏமாத்தி  கல்யாணம் பண்ணிகிட்டறு போன வருஷம் இத பத்தி கேட்டா கல்யாணம் ஆனா அப்புறம் என்ன d கமல் la பாக்கணும் நான் தான் இப்போ உனக்கு கமல் nu  என்ன வெறி எத்திடறு.ஆயிரம் தான் சொன்னாலும் கமல் கமல் தான் watta man he issssss உஹ்ம்ம் என்ன பாக்குறீங்க வேற என்ன பெருமூச்சூதான்

மொட்டை மாடி ......

எனக்கு நெனவு தெரிஞ்சி 2002  வரைக்கும் எங்க வீடு ஓட்டு வீடு தான் அதுக்கு அப்புறம் தன மாடி வீடு கட்டினோம் . நான் சின்ன வயசுல இருக்கும் பொது எங்க தெருல 40% தான் மாடி வீடு மத்தது எல்லாமே ஓட்டு வீடு தான் . ஓட்டு வீடுன்னு சொன்ன ஒடனே நீங்க முத்தம், தாழ்வாரம் nu down southla  இருக்கற வீடு மாதிரி கற்ப்பன பண்ணாதீங்க... ஒரு பெரிய hall ,அப்புறம் ஒரு kitchen ,சின்ன வராண்டா அப்புறம் மாடு கட்டி வெக்க கொஞ்சம் பெரிய தொழுவம் அவ்வளவே தான் எங்க வீடு .எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு கோவில் வீடு so tradintional ஓட்டு வீடு   இருக்கற மாதிரி முத்தம்,தாழ்வாரம் நு நல்ல பெருசா இருக்கும்.
                 அப்போலாம் சும்மர் சீசொன்ல மட்டும் தான் கரண்ட் கட் பண்ணுவாங்க, கரண்ட் கட் ஆனா எல்லாரும் மொட்டை மாடிக்கு போவாங்க ஆனா நாங்க மாடி இல்லைனாலே வாசல் படிக்கு வந்துடுவோம்...
எப்படியோ கரண்ட் ஒரு 4 மணி நேரமாது கட் பண்ணுவாங்க home work   பண்றது, தெருவுல அந்த இருட்டுளையும் கண்ணாம்பூச்சி விளையாடுவோம் அப்புறம் ஒரு 8 மணி போல அம்மா சாப்பாடு உட்டிவிடுவங்க மாடில நிலவ பாத்துட்டு சாப்டுற மாதிரி வாசல் படில ஒக்காந்து நிலவ பாத்துடே சாப்டுவேன்.
         நான் ஒரு 8 std படிக்கும் பொது எங்க தெருல எல்லா வீடும் மாடி வீடு ஆயிடுச்சு சொல்ல போன இந்த பக்கம் மாடி வீடு அந்த பக்கம் மாடி வீடுnu எங்க வீடு மாட்டும் தான் ஓட்டு வீடு அப்போ கொஞ்சம் ஏக்கமா இருக்கும் ச்ச என்னடா இது நாம எப்போ தான் மாடி வீடு கட்டுவோம் ... நாமலும் எப்போ தான் மொட்ட மாடில நடந்திட்டே படிக்கறது,நிலவ பாத்து சாப்டுறது,படுக்கறது நு...
                 எங்க அத்தை வீட்டுக்கு  summer leave ku போவேன் அவங்க வீடு பெரிய மாடி வீடு அத்த எங்களுக்கு சமச்சி சப்பட மாடிக்கு கொண்டு வந்துடுவாங்க நாங்க சுத்தி ஒக்காந்து சாப்பிடுவோம் அப்போலாம் என்னோட அந்த சின்ன அல்ப மாடி ஆசை கொஞ்சம் அடங்கும்..பாய விரிச்சி படுத்து stars a பாத்துகிட்டு எல்லாம் கதையும் நானும் என்  cousinsum  பேசுவோம்.வீடுன்றது வெறும் கட்டடமா இல்லாம நம்மள ஒருத்தரா இருந்துச்சு அது தான் என்னோட மாடி ஏக்கத்துக்கு இரு பெரிய காரணம் நெனைக்கறேன் இப்போ மாடி வீடு இருக்கு ஆனா அதா ரசிக்க நேரமும் இல்ல ரசிக்கற அந்த குழந்தை மனசும் இல்ல infact மாடிக்கு போறதையே ஒரு பெரிய வேலையா நெனைக்கறோம்.
          Recenta வந்த பாடல்கள நான் அடிகடி முணுமுணுக்கும் songna அது அங்காடி தெரு படத்துல வர "கதைகளை பேசும்  விழி அருகே "  ........ பாடல் ....... especially அதுல வர அந்த வரி " வெறும் தரையில் படுத்து கொண்டே விண்மீன் பார்ப்பது யோகமடி" ஏனோ இந்த வரிய கேக்கும் பொது  i get emotional.இந்த பாட்ல வராமாதிரி life  அவ்வளோ simplea....easya.... இருந்த எவ்வளோ நல்ல இருக்கும்