Friday, March 16, 2012

கொலை களம்!!

      நேற்று மீண்டும்  "ஸ்ரீலங்கா கொலைகளம்" என்ற பெயரில் channel 4 ஒரு ஆவண படத்தை வெளியிட்டு இருந்தது நாம்  கனவிலும் கற்பனை பண்ண முடியாத கோர காட்சிகள்.... கொடூர கொலைகள்,அருவெருக்கத்தக்க கற்பழிப்புகள் இவை எல்லாம் நடந்தது எங்கோ உலகின்  ஒரு மூலையில் அல்ல நமக்கு சில kilo meter  அருகில் தான் . நாட்டின் ஏதோ ஒரு இடத்தில இருந்து ஒரு முதியவர் ஊழலை ஒழிப்பேன் என்று கிளம்பினார்.... ஊழலால் வெறுத்து போய் இருந்த மக்கள்  அவர் பின்னல் குரல் கொடுத்தோம் ... பள்ளி,கல்லூரி,தொழிற் சாலை ஏன் மிகவும் சுயநலவாதிகள் என்று பெயர் எடுத்த software engineers  கூட போராட்டத்தில் பங்கெடுத்தோம் .நாடே பொங்கி எழுந்தது .... எதற்கு? ஊழலை ஒழிக்க. ஊழலை ஒழிக்க குரல் குடுத்த நாம்  போர் குற்றம் புரிந்து அப்பாவி  மக்களை கொன்றவர்களை பற்றி பேச ஏன் மறுக்கிறோம் . தமிழனாய் பிறந்ததை தவிர யாதொரு பிழையும் செய்யாத என் சகோதரிகளின் கற்பை ஏன் சுரையடினாய்? ஏன் அவர்களின் தாலி கொடிகளை அருத்தெரிந்தாய் ?தாயின் மார்பில் பால் குடித்து கொண்டு இருக்கும் குழந்தைகள் உன்னை என்ன செய்தது ... இறந்த பிணத்துடன் உறவு கொண்டாய் என ஆவண படத்தில் கூறுகிறார்கள் ரத்தம் குடிக்கும் ஓநாய் கூட இன்னொரு ஓநாய் மீது பாயாது அது சிறு மிருகங்களியே தாக்கும். ஆனால் தன் சொந்த நாட்டினர் என்ற பாசம் வேண்டாம் சக மனிதன் என்ற இறக்கம் கூட இல்லாமல் வெறி பிடித்த செந்நாய்  போல நடந்து கொண்டாய் ... தவறு  செந்நாய் இந்த காட்சிகளை பார்த்தல் கேவலமான மனித கூட்டம் என்ற நம்மை இகழும்.
        எனக்கு வரலாறு தெரியாது..... புலிகளை தெரியாது .... ஆனால்  மனிதம் தெரியும்! நான் பார்த்த காட்சிகள் பொய் இல்லை என்று தெரியும்! நீ கொன்றது அப்பாவி மக்கள் என்று தெரியும்! உன்னை ஒன்றுமே செய்யமுடியாத கையாலாகாத பல இலடச்ச மக்களில் நானும் ஒருத்தி .....சாதாரண செய்திகளை debate  வைத்து அலசி தன்னை national media என்று காட்டிக்கொள்ளும் வட இந்திய channel ஒன்று கூட இலங்கையில் நடந்த கொலை குற்றத்தை நேர்மையாக தொகுக்கவில்லை.சிரியாவை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ? போர் குற்றத்தை  விவாதிக்க சுப்ரமணிய சுவாமியை அழைக்கிறது . ராஜபக்சேவிற்கு பாரத ரத்னா அளிக்க வேண்டும் என்று சொன்னவர் தான் சுவாமி.
         இந்திய அரசு கொண்டு வரவேண்டிய தீர்மானத்தை இலங்கை மீது அமெரிக்க கொண்டு வந்துள்ளது இன்னும் ஏன் கை கட்டி மௌனம்??? ஏன் ராஜபக்ஷே ,இந்தியாவும் போரில் எங்கள் கூட்டாளி தான் என்று போட்டுடைத்து விடுவார் என்ற பயமோ? ...... இறந்தவர்களை  விடுங்கள் உயிரோடிருக்கும் மக்களையாவது காக்க தீர்மானத்தை ஆதரித்து இந்தியாவின் தீராத பழியை போகுங்கள். காந்தி பிறந்த இந்த மண்மீது எங்களுக்கு ஊசலாடி கொண்டு இருக்கும் கொஞ்ச நம்பிக்கையை அறுத்தெறிந்து விடாதீர்கள் ....இன்னும் இதை "Tamils emotions"  என்று வாய் கூசாமல் சொல்லாதீர்கள். அங்கே கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பது மனிதர்கள் உங்களுக்கு மனிதாபிமானம் கொஞ்சமேனும் இருந்தால் தீர்மானத்தை ஆதரியுங்கள் . கையாலாகாத கண்ணீர் என்ன செய்துவிட முடியும் தெருவில் வந்து போராட்டத்தை துவங்க எனக்கு துணிவு இல்லை....ஆனால் கையாலாகாத கண்ணீர் இருக்கிறது .  . ஊழலின் அளவினால் , கொலை குற்றங்களின் அளவினால் மட்டுமே  வேறு பட்டிருக்கும் நம் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க குரல் கொடுப்போம் .குறைந்த பட்சம் இது வெறும் தமிழர்களின் பிரச்சனை அல்ல என்பதை நம் வேற்று மொழி நண்பர்களுக்கு உணர்த்துவோம்.  இனத்தினால் , நாட்டினால் , மொழியினால் வேறு பட்டவர்களாய்  இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் மனிதர்கள் ரத்தம் குடிக்கும் காட்டேறிகள் அல்ல....அங்கே  கொடுமையாக கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் மிருகங்கள் அல்ல....காத்திருப்போம் காலம் பதில் சொல்லுமென வெறும் கையாலாகாத கண்ணீருடன்!!

Thursday, February 9, 2012

பொன்னியின் செல்வன் !!

நான் ரொம்ப நாளா படிக்கணும்னு நெனச்சிட்டே இருந்த புக் தான் பொன்னியின் செல்வன் !! உண்மை சொல்லணும்னா எனக்கு இந்த புக் பத்தி பெருசா ஒரு அபிப்ராயமும் கெடையாது அப்போ அப்போ எதாச்சும் ஒரு டைரக்டர் நான் பொன்னியின் செல்வனை படமா எடுக்க போறேன் சொல்லுவாங்க அப்படி நான் கேள்வி பட்டது தான் இந்த பொன்னியின் செல்வன்.அப்புறம் என்னோட ஸ்கூல் ப்ரிண்ட்ஸ் மஹாவும், குஹாவும் சம்மர் லீவ்ல பொன்னியின் செல்வன் படிச்சாங்க அவ்வளோ தான் நமக்கு இந்த நாவல பத்தி தெரியும்.
               இங்க கட் பண்ணி அப்படியே ஒரு ஏழு வருஷம் அப்புறம் வருவோம் நமக்கு மகேஷ் மாதிரி நாவல் படிக்கற நண்பர்கள் கெடச்ச அப்புறம் புக்ஸ் பத்தி நெறைய பேசிட்டு இருக்கும் பொது தான்   திரும்பவும் பொன்னியின் செல்வன் என்னோட மண்டைக்குள்ள வந்துச்சு.மகேஷ் இந்த பூக்க  பத்தி சொல்ல சொல்ல அப்படி என்ன தான் இருக்கு இதுலன்னு  ஒரு இது வந்துச்சு....இது na என்னனு கேகதீங்க ஒரு இது அவ்வளோ  தான் . படிக்கணும் ஆனா 2000 பக்கம் கொஞ்சம் யோசிச்சி பாத்தேன் சாதரண ஒரு மர்ம நாவல்...... இல்ல ஒரு அமானுஷ்ய கத na  ஒகே ஒரு அசதியே இல்லாம ஓட்டமா ஓடிடும் ஆனா இது ஒரு சரித்தர கத இவ்வளோ பக்கம் நமலாலா படிக்க முடியும்னு யோசிச்சே ..............ஒரு 6 மாசம் இந்த புக் படிக்காம நான் தள்ளி போட்டேன் உடச்சி சொல்லணும்னா ஒரு அருமையான அனுபவத்த என்ன அறியாமையே  தள்ளி போட்டேன்...

அப்புறம் ஒரு வழிய படிச்சே ஆகணும்னு தோணி லைப்ரரில புக் எடுத்தேன் மொதல் அத்தியாயம் தான் எடுத்தேன் ரொம்ப நிதானமா ஆற அமர அப்போ ......அப்போ தான் படிச்சேன் ஆனா படிக்க படிக்க ஒரு ஆர்வம் அப்புறம் மீதிய ஆன்லைன்ல படிக்கச் ஒரு லிங்க் குடுத்தாரு நம்ம மகேஷ் இந்த கதைய படிக்க ஆரம்பிக்கும் பொது எனக்கு அவர் சொன்ன ஒண்ணு தான் இப்பவும் தோணுது "பொன்னியின் செல்வன் உங்க படிப்பு ரசனைய நிச்சயமா ஒரு படி மேல கொண்டு போகும் அதா விட முக்கியம் இது ஒரு அனுபவம்" அது எவ்வளோ உண்மைன்னு நான் அனுபவிச்சேன்
                   . இப்போ பொன்னியின் செல்வன் நு யாராச்சும் சொன்ன அப்படியே புல்லரிச்சி  போய்டுது .நீங்க பொன்னியின் செல்வன் படிச்சி இருக்கீங்களா? nu  ஆரம்பிச்சு நூல பத்தி ஒரு ஒரு மணி நேரம் கருத்து  பரிமாறிக்கலாம் .(ஒரு மணி நேரம் ரொம்ப கம்மி தான் ) இதோட கதை ரொம்ப ரொம்ப சிம்பிள் அருள்மொழி வர்மன் எப்படி ராஜா ராஜா சோழன் ஆனான் இது தான் கதை,இந்த ஒரு நிகழ்ச்சிய ஒட்டி நடந்த விஷியங்கள அமரர் கல்கி எழுதின விதம் ரொம்ப ரொம்ப அருமை .மன்னராட்சிய நாம ஒழிசிட்டோம் ஆனா மன்னர்கள் மக்கள் மேல எவ்வளோ மதிப்பும் அக்கறையும் வெச்சி இருந்தாங்கன்னு இந்த வரலாற்று கதை ரொம்ப தெளிவா சொல்லுது .இந்த கதைல வர்ற சம்பவங்கள உண்மைல நடந்துச்சா இல்ல புனைய பட்ட கதையானு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு .
            என்னோட பிரின்ட் குஹா பொன்னியின் செல்வன் படிச்சிட்டு வாந்திய தேவன் மேல crush வந்துச்சுன்னு சொன்னா..... அது எவ்வளோ உண்மைன்னு எனக்கு கதைய முடிச்ச அப்புறம் தான் புரிஞ்சிது .கதை படிக்க ஆரம்பிச்சி ஒரு  வாரம் தொடர்ந்து வாந்திய தேவனும், பொன்னியின் செல்வன் கதை களமும் அதுல நடக்குற சம்பவங்களும் தான் என்னோட கனவுல வந்துச்சு . இந்த கதைய படிச்சி முடிக்க எனக்கு  ஒரு வாரம் தேவை பட்டுச்சு அந்த ஒரு வாரமும் ஆபீஸ் எப்ப போவோம் எப்போ பொன்னியின் செல்வன் லிங்க ஓபன் பண்ணுவோம்னு இருந்துச்சு .என்ன சுத்தி என்ன நடக்குது..... யாரு ,என்னனு என்னோட கவனம் எதையுமே கவலை படவேக்கமா ஒரு மாயகட்டு போட்டுச்சு தான் சொல்லணும் .எந்த கத படிச்சாலும் அதுல வர கதாபத்திரங்கள நான் கற்பன பண்ணும் பொது ஒரு நடிகரோ இல்ல நடிகையோ வச்சி தான் imagine பண்ணிப்பேன் ஆனா முதல் முறைய நான் எந்த ஒரு நடிகரின் நடிகையின் influence இல்லாம வாந்திய தேவன.... வாந்திய தேவனவே தான் எனால பக்க முடிஞ்சிது நந்தினிய நந்தினியா தான் என்னோட மனசுல பாத்தேன்.யார் யாரோ இந்த நாவல படமாக்க போறேன் சொல்றாங்க அவங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய வேண்டுகோள் தயவு செஞ்சி இந்த கதைய கனவிலும் தொடாம இருக்கறதே இவ்வளோ  அற்புதமான படைப்ப தந்த அமரர் கல்கிக்கு நாம செலுத்துற நன்றியா இருக்கும்னு நான் நெனைக்கறேன்
           இப்போ இந்த போஸ்ட் எழுதும் பொது இந்த நூல பத்தி என்ன என்னமோ எழுதனும்னு தோணுது ஆனா எவ்வளோ எழுதினாலும் போதாது nu  எனக்கு தெரியும்.இதுக்கு அப்புறம் நான் இந்த மாதிரி ஒரு வரலாற்று கதைய படிபேன தெரியல அப்படி படிச்சாலும் back in my mind  நான் அத பொன்னியின் செல்வன் கூட தான் சத்தியமா compare  பண்ணுவேன் அது மட்டும் எனக்கு நல்ல தெரியும் .என்ன பொறுத்த வரைக்கும் எல்லா தமிழர்களும் ஒரு முறையேனும்  படிக்க வேண்டிய புக் பொன்னியின் செல்வன் .நான் ஒண்ணும் புதுசா வழிமொழிய போறது இல்ல எல்லாரையும் போலவே சொல்லறேன் பொன்னியின் செல்வன் ஒரு அனுபவம் என்ன பொறுத்த வரைக்கும் ஒரு பரவசம்  !!!

P.S: அருள்மொழி வர்மன் பொறந்த அதே நட்சத்திரம்  ராசி தான் என்னோடதும் இதுல ஒரு அல்ப சந்தோஷம் :-)