நேற்று மீண்டும் "ஸ்ரீலங்கா கொலைகளம்" என்ற பெயரில் channel 4 ஒரு ஆவண படத்தை வெளியிட்டு இருந்தது நாம் கனவிலும் கற்பனை பண்ண முடியாத கோர காட்சிகள்.... கொடூர கொலைகள்,அருவெருக்கத்தக்க கற்பழிப்புகள் இவை எல்லாம் நடந்தது எங்கோ உலகின் ஒரு மூலையில் அல்ல நமக்கு சில kilo meter அருகில் தான் . நாட்டின் ஏதோ ஒரு இடத்தில இருந்து ஒரு முதியவர் ஊழலை ஒழிப்பேன் என்று கிளம்பினார்.... ஊழலால் வெறுத்து போய் இருந்த மக்கள் அவர் பின்னல் குரல் கொடுத்தோம் ... பள்ளி,கல்லூரி,தொழிற் சாலை ஏன் மிகவும் சுயநலவாதிகள் என்று பெயர் எடுத்த software engineers கூட போராட்டத்தில் பங்கெடுத்தோம் .நாடே பொங்கி எழுந்தது .... எதற்கு? ஊழலை ஒழிக்க. ஊழலை ஒழிக்க குரல் குடுத்த நாம் போர் குற்றம் புரிந்து அப்பாவி மக்களை கொன்றவர்களை பற்றி பேச ஏன் மறுக்கிறோம் . தமிழனாய் பிறந்ததை தவிர யாதொரு பிழையும் செய்யாத என் சகோதரிகளின் கற்பை ஏன் சுரையடினாய்? ஏன் அவர்களின் தாலி கொடிகளை அருத்தெரிந்தாய் ?தாயின் மார்பில் பால் குடித்து கொண்டு இருக்கும் குழந்தைகள் உன்னை என்ன செய்தது ... இறந்த பிணத்துடன் உறவு கொண்டாய் என ஆவண படத்தில் கூறுகிறார்கள் ரத்தம் குடிக்கும் ஓநாய் கூட இன்னொரு ஓநாய் மீது பாயாது அது சிறு மிருகங்களியே தாக்கும். ஆனால் தன் சொந்த நாட்டினர் என்ற பாசம் வேண்டாம் சக மனிதன் என்ற இறக்கம் கூட இல்லாமல் வெறி பிடித்த செந்நாய் போல நடந்து கொண்டாய் ... தவறு செந்நாய் இந்த காட்சிகளை பார்த்தல் கேவலமான மனித கூட்டம் என்ற நம்மை இகழும்.
எனக்கு வரலாறு தெரியாது..... புலிகளை தெரியாது .... ஆனால் மனிதம் தெரியும்! நான் பார்த்த காட்சிகள் பொய் இல்லை என்று தெரியும்! நீ கொன்றது அப்பாவி மக்கள் என்று தெரியும்! உன்னை ஒன்றுமே செய்யமுடியாத கையாலாகாத பல இலடச்ச மக்களில் நானும் ஒருத்தி .....சாதாரண செய்திகளை debate வைத்து அலசி தன்னை national media என்று காட்டிக்கொள்ளும் வட இந்திய channel ஒன்று கூட இலங்கையில் நடந்த கொலை குற்றத்தை நேர்மையாக தொகுக்கவில்லை.சிரியாவை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ? போர் குற்றத்தை விவாதிக்க சுப்ரமணிய சுவாமியை அழைக்கிறது . ராஜபக்சேவிற்கு பாரத ரத்னா அளிக்க வேண்டும் என்று சொன்னவர் தான் சுவாமி.
இந்திய அரசு கொண்டு வரவேண்டிய தீர்மானத்தை இலங்கை மீது அமெரிக்க கொண்டு வந்துள்ளது இன்னும் ஏன் கை கட்டி மௌனம்??? ஏன் ராஜபக்ஷே ,இந்தியாவும் போரில் எங்கள் கூட்டாளி தான் என்று போட்டுடைத்து விடுவார் என்ற பயமோ? ...... இறந்தவர்களை விடுங்கள் உயிரோடிருக்கும் மக்களையாவது காக்க தீர்மானத்தை ஆதரித்து இந்தியாவின் தீராத பழியை போகுங்கள். காந்தி பிறந்த இந்த மண்மீது எங்களுக்கு ஊசலாடி கொண்டு இருக்கும் கொஞ்ச நம்பிக்கையை அறுத்தெறிந்து விடாதீர்கள் ....இன்னும் இதை "Tamils emotions" என்று வாய் கூசாமல் சொல்லாதீர்கள். அங்கே கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பது மனிதர்கள் உங்களுக்கு மனிதாபிமானம் கொஞ்சமேனும் இருந்தால் தீர்மானத்தை ஆதரியுங்கள் . கையாலாகாத கண்ணீர் என்ன செய்துவிட முடியும் தெருவில் வந்து போராட்டத்தை துவங்க எனக்கு துணிவு இல்லை....ஆனால் கையாலாகாத கண்ணீர் இருக்கிறது . . ஊழலின் அளவினால் , கொலை குற்றங்களின் அளவினால் மட்டுமே வேறு பட்டிருக்கும் நம் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க குரல் கொடுப்போம் .குறைந்த பட்சம் இது வெறும் தமிழர்களின் பிரச்சனை அல்ல என்பதை நம் வேற்று மொழி நண்பர்களுக்கு உணர்த்துவோம். இனத்தினால் , நாட்டினால் , மொழியினால் வேறு பட்டவர்களாய் இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் மனிதர்கள் ரத்தம் குடிக்கும் காட்டேறிகள் அல்ல....அங்கே கொடுமையாக கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் மிருகங்கள் அல்ல....காத்திருப்போம் காலம் பதில் சொல்லுமென வெறும் கையாலாகாத கண்ணீருடன்!!

No comments:
Post a Comment