Wednesday, November 23, 2011

மோதல் காதல் .....

                        மோதல்ல ஆரம்பிக்கறது காதல்ல முடியுமா? முடியும்....... முடியும்.... சினிமால மட்டும் தான் முடியும் நிஜ வாழ்கைல அதுக்கான சாத்தியம் ரொம்ப ரொம்ப கம்மி.ஆனா சில நேரத்துல சினிமாவ மிஞ்சுரா மாதிரி நிஜ வாழ்கைல incidents நடக்கும்.நேத்து நானும் ரம்யாவும் பேசிட்டு இருக்கும் பொது இந்த topic  வந்துது " எனக்கு முதல்ல யாரயும் பாத்த ஒடனே புடிக்காது" நு ரம்யா சொன்னா... நான் சொனேன் எனக்கு அப்படிலாம் ஒண்ணும் இல்ல infact            சில பெற பாத்த ஒடனே எனக்கு ரொம்ப புடிச்சி போய்டும்..ஆனா கொஞ்ச பெற தான் எனக்கு புடிக்காம போய் இருக்கு அதுவும் நான் room  போட்டு எல்லாம் திட்டி இருக்கேன் கொலவெறியோட சுத்தி இருக்கேன் அவங்கள  சொன்னேன் அப்படி பேச்சு போய்டே இருக்கும் பொது தான் என்னோட சொந்த கத ஒண்ண சொன்னேன் ரம்யா கிட்ட... அவ அய்யோ! அப்படியா! சூப்பர்! நு செம த்ரில் ஆயிட்டா.

                 .நானும் சங்கீதாவும் நோய்டல இருந்து சென்னை வந்த புதுசு அப்போ இங்க PKTla ஆட்கள்  ரொம்ப கம்மி எங்கள mainframes platformla போட்டாங்க எங்களுக்கு mainframes na என்ன????  STD தானேனு கேக்குற லெவல் தான் so தினேஷ் கிட்ட எங்களுக்கு mainframes  கத்து குடுக்க சொன்னங்க. தினேஷோட  seat பக்கத்துல தான் சதிஷோட seat  .சதீஷ் அப்போ US போக ticketkaga  வெயிட் பண்ணிட்டு இருந்தாரு.சுருக்கமா சொல்லனும்ன project இல்லாம வெட்டியா இருந்தாரு. இந்த தினேஷ் இருக்காரே கலைளலாம் விட்டுடுவாரு  லஞ்ச் அப்புறம் தான் training  வர சொல்லுவாரு சும்மாவே நமக்கு ஒன்னும் புரியாது இதுல லஞ்ச் அப்புறம் வேற தூக்கம் சொக்கி இழுக்கும் இது இந்த கழுகுக்கு அதாங்க சதிஷ்க்கு எப்படி தான் தெரியுமோ கரெக்டா நடுல பாஞ்சி" dai தினேஷ் திருத்து டா இவன் என்ன சொன்னானோ அதா explain பண்ணுங்கனு ஒரு குண்ட தூக்கி போடுவாரு அப்போ தான் நான்லாம் தூக்கத்துல இருந்து எழுந்தரிப்பேன்....சங்கீதா ஏதோ தட்டு தடுமாறி சொல்லுவா ஒடனே நீ ஸ்டாப் பண்ணு நீ சொல்லுனு கரெக்டா நமக்கு ஆப்பு வேப்பரு நான் திரு திருன்னு முழிப்பேன் ஒடனே பாருடா " நீ உயிரை விட்டு சொல்லி குடுத்த இவங்க எப்படி கவனிக்கரங்க nu போட்டு வேற குடுப்பாரு".
                           எனக்கு செம அவமானமா போய்டும் அப்போ ஆரம்பிச்சேன் அவர திட்ட ஓடினேன் ஓட்டினேன் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினேன் மாதிரி திட்டினேன் திட்டினேன் செமைய திட்டினேன் . இது மட்டும் இல்லமா  எங்க பாத்தாலும் ஒரு கேள்விய கேப்பாரு "what is mainframes'? அதுக்கு கூகுள் la தேடி என்ன பதில் சொன்னாலும் அப்புறம் மேல சொல்லுனு சொல்லி எங்கள கொல்லுவாரு அதுலையும் என்ன பாத்தா எப்படி தெரியும்னு தெரியல அவருக்கு cafeteria la  பாத்தா கேப்பாரு, டீ குடிக்க போகும் பொது பாத்தா கேப்பாரு.....ஓபென சொல்லனும்ல wash room  போயிட்டு வந்துட்டு இருப்பேன் அப்போ கூட கேப்பாரு ...... இப்படி எங்க பாத்தாலும் ஒரே கேள்வி தான் என்ன வெறி ஆக்குன கேள்வி.
                        அந்த ஆல திட்டோ  திட்டுன்னு  தமிழ்ல இருக்கற அத்தன கேட்ட வரத்தையும்  use பண்ணி திட்டி இருக்கேன் இதுல சாபம் வேற unlimiteda  குடுத்து இருக்கேன்.சங்கீதா கெஞ்சுவா பாவம் d வேணாம் சாபம்லாம்  குடுக்காத  நு சொல்லுவா அவ கொஞ்சம் soft  ஆனா   எனக்குல தெரியும் எப்படி என்ன அந்த ஆளு torture & insult  பண்ணாருன்னு.இப்படி  போயிட்டு  இருக்கும் பொது நல்லவேள அவரு US போய்ட்டாரு இந்த கேட்ட எனக்கு செம ஜாலி ஒரு வாரம் நல்ல போச்சு.
                             ஒரு நாள் எனக்கு Same timela Ping  பண்ணாருஅய்யோ விட்ட சனி திரும்பவும் புடிக்கற மாதிரி இருந்துச்சு , சங்கீதா வ கூப்ட்டு  ஹே இந்த சூனியம் புடிச்சவன் எதுக்கு d எனக்கு  ping பண்றன்னு வேற சொன்னேன்....ஒடனே அவ என்னனு தெரியலையே  சும்மா பேசுன்னு என்ன இன்னும் திகில் ஆக்கிட்டா அப்புறமா தான் தெரிஞ்சிது சும்மா தான் பொழுது போகாம  ping பண்ணாருன்னு.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எனக்கு அவர் மேல இருந்த பயம் போச்சு ஆனாலும் திரும்பவும் வந்து "what is mainframes nu"? கேட்டு  torture பண்ணா?....இதுக்கு  நடுல தான் aussie la settle  ஆகா போறதாவும் அதுக்கு என் கிட்ட idea  கேட்டாரு நானும் எங்க இவர் திரும்ப வந்து என்ன இம்ச பண்ணா போறாருன்னு சூப்பர் பிளான் சதீஷ் நல்லா  settle  ஆகுங்க nu  குள்ள நரி  idealam குடுத்தேன்.ஆனா அங்க போய் இங்க போய் கடசில என்கூடவே மொக்க போட்டு ,ஊர் சுத்தி, கல்யாணம் பண்ணி சபா நெனச்சாலே கண்ணா கட்டுது. இப்போ ஏன் சதீஷ் என்ன மட்டும் குறி வெச்சி அப்படி ஒரு கோல வெறியோட கேள்வி கேடீங்கனு கேட்ட ..".உன்ன பாத்தாலே எனக்கு உன் கால வரணும்னு  தோணும்  அதான் உன்ன மட்டும் கேள்வி கேட்டே கிண்டல் பண்ணேன்" சொல்லுவாரு. இப்படி  தான் மொதல்ல ஆரம்பிச்ச எங்களோட அது காதலா முடிஞ்சி இப்போ அப்போ அப்போ கொஞ்சம்  மோதலோட வண்டி ஓடிட்டு இருக்கு

Tuesday, November 15, 2011

நள்ளிரவில் .....

                   உங்களுக்கு நடுராத்திரில பசிச்சி இருக்கா ..... அப்படி பசிக்கும் பொது அந்த நேரத்துல சாப்ட hotel  தேடி அலைஞ்சி இருக்கீங்களா? நான் எப்பவுமே என்னோட லைப் கொஞ்சம் boring  தான்னு நெனைப்பேன். ஆனா இந்த போஸ்ட் எழுத start  பண்ண ஒடனே தான் யோசிக்கறேன் நானும்  lifea  கொஞ்சம் நல்லாவே enjoy  பண்ணி இருக்கேன்.

                    நான் முன்னாடி சொன்ன மாதிரி முன்னடிலம் நான் நைட் ஷிப்ட்ல தான் வருவேன் எவ்வளோ தான் 8 மணிக்கு சாப்ட்டாலும் மணி 12 அடிக்குதோ இல்லையோ எங்க வயத்துல மணி அடிச்சிடும் நேர மேல இருக்கற cafeteria போய் சிப்ஸ் ,கேக் அது இது கொட்டிகிட்டு வருவோம் weekday na பிரச்சன இல்ல இதுவே weekend na நாங்க செத்தோம்.சாப்ட ஒண்ணுமே இருக்காது பசங்களது பரவா இல்ல dum  அடிச்சி பசி ஆத்திப்பானுங்க ஆனா நாம என்ன பண்றது...  அப்படி ஒரு நாள் கொல பசி அன்னைக்கு ஷிப்ட்ல நானும் ராம் பிரகாஷும் இருந்தோம் நான் ஏற்கனவே http://sandhyaselvam.blogspot.com/2011/10/pkt.html ராம் பத்தி சொல்லி இருந்தேன்.ராம் ஜாலியா dum  அடிச்சிட்டு வந்துட்டாரு எனக்கு பசில எல்லாமே மங்கலா தெரிய ஆரம்பிச்சிடுச்சு அப்போ தான் ராம் அன்னைக்கு அவரோட கார்ல வந்தேன்னு சொன்னாரு ஒடனே எடுங்க கார நு நாங்க ரெண்டு பெரும் நைட் 1 மணிக்கு அண்ணா சாலைல ஆரம்ப்பிச்சு தி நகர் வரைக்கும்   போனோம் hotela தேடி.
                    எல்லாம் எங்க நேரம் ஒரு hotel  கூட தேரந்து இல்ல சொல்லி வெச்ச மாதிரி எல்லாம்  closed .கடசியா பண்டி பசார் கிட்ட ஒரு hotel  தேரந்து இருந்துச்சு சாமி புண்ணியவன்னு உள்ள போய் பிரியாணி சாப்ட்டு வந்தோம் .இப்படி வெறும் பசில சுத்தினது இல்லாம சும்மாவே ஸ்பென்சர்ஸ்  oppostiela இருக்கற டீ கடைக்கு ராம் கூட ஓட்டிகிட்டு நானும் பார்கவியும் போவோம் ஜனசந்தடி இல்லாம ரொம்ப அமைதியான அண்ணா சாலைய ஒரு சூடான டீ + பட்டர் பிஸ்கட் oda என்ன என்னமோ கத பேசிட்டு ரசிப்போம்.
               சில நேரத்துல எனக்கு  திடீர்னு  நைட் la கிரேப் ஜூஸ் குடிக்கணும் போல இருக்கும் நானும் சதீஷ் ஒன்ன ஷிப்ட்ல இருந்தோம்ன ஜாலியா கெளம்பிடுவோம் நேர சைதாபேட் முன்னாடி இருக்கற hyndai showroom  பக்கத்துல ஒரு ஜூஸ் கட நைட்   fulla தேரந்து இருக்கும் அங்க போய் ஒரு கிரேப் ஜூஸ் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் மொக்க போட்டுட்டு வருவோம்  .
                 நான் நைட்  la வெளில போனதே இல்லப்பா nu பெருமையா சொல்றவங்கள பாத்தா சிரிப்பு தான் வருது நைட் லைப் எவ்வளோ peace & beautiful nu அவங்களுக்கு பாவம் தெரியவே இல்ல. அதா விட முக்கியம் அப்போ பண்ண சில்வண்டு தனம் எல்லாம் இப்போ நெனைக்கும் பொது ச நானும் வாழ்ந்து இருக்கேன்னு சொல்ல வெக்குது...

Monday, November 14, 2011

Jane do na....


போன வெள்ளிகேழமா வரைக்கும் எதுன்னு the best onscreen romantic jodi nu கேடீங்கன அது சூரியா - ஜோதிகா இல்ல கமல் - ரேவதி எதாச்சும் ஒரு ஜோடிய சொல்லி இருப்பேன் ஆனா இப்போ எந்த ஜோடி ரொம்ப ரொமாண்டிக் ஆனா ஜோடி நு கேட்ட என்ன பொறுத்த வரைக்கும் அது அமிதாப் - தபு தான்.
             ரொம்ப நாளா பாக்கணும்னு நெனச்சு  friday அன்னைக்கு ஆபீஸ்ல திருட்டு தனமா பாத்த படம் தான்  Cheeni Kum அமிதாப், தபு  நடிப்புல  2007வருஷம் ரிலீஸ் ஆனா படம் தான் இது. தன்னோட அப்பாவ விட வயசான ஒரு cook  மேல தபுக்கு காதல்.... எப்பவுமே வேல வேல நு சரியான சிடு மூஞ்சியா இருக்கற அம்பிதாப் காதல் வயப்பட்டு 64 வயசுல செய்யற குசும்பு ரொம்ப ரொம்ப சூப்பர்.இந்த படத்த விட என்ன ரொம்ப ஈர்த்தது இந்த படத்துல வர பாட்டு .நம்ம ஊர் இளையராஜா தான் மியூசிக் மொதல்ல இந்த படத்தோட பாட்ட கேக்குறவங்களுக்கு அட !அப்படின்னு தான் தோணும் என்ன எல்லா பட்டுமே தமிழ் ஹிட்டான 80's மெலடி பாடல்களோட  tune தான்.

            அப்படி இருந்தும் எது என்ன ஈர்த்தது இந்த படத்துல வர " jane do na " song   நம்ம நூறாவது நாள் படத்தோட "விழியிலே மணி விழியிலே" tune  தான்னு இருந்தாலும் அதோடpicturisation . இந்த பாட்ட ஸ்ரேயா கோஷல்  கோரல்லா கேக்கும் பொது ஒரு melting  மைசூர்பாக் சாப்டுற மாதிரி அவ்வளோ ஒரு சுகம் .காதல்வய படும் ஒருத்தன் தன்னோட காதலி கிட்ட என்ன குறும்பு சேட்டை செயவ்வனோ அதை எல்லாம் அமிதாப் இந்த வயசுல செஞ்சி பாக்குறது ஒரு வித சுவாரஸ்யம் தான் . ஒரு சீன்ல தபுவும் அமிதாபும் கண்ணாலையே காதலா அவ்வளோ ரொமாண்டிக்கா பகிர்ந்துப்பங்க.
       தபு கிட்ட "I wanna make love to you"அத எங்க பண்ணலாம் நு மண்ணடி போட்டு கேக்கும் எடத்துல amitabh is so much in luv....தூண்ல வெச்சி இருக்கற தபுவோட வெரல சீண்டும் போதும் ... தபுவையே ரசிச்சிட்டு இருக்கற சீன்....அப்படின்னு நெறைய சீன் சொல்லலாம் எல்லாமே அருமை இது  அமிதாபோட " One of the THE BEST PERFORMANCE". இது எல்லாமே என்னோட காதல் நாட்டகள எனக்கு நினைவு படுத்துச்சு..... கண்ணால பேசிக்கறது ......திருட்டுதனமா கைய புடிக்கறது ...... ஒரு ஓதட்டு சுழிப்பு cha i wanna fall in luv again....நேரம் கெடச்சா இந்த பாட்ட  youtubela கண்டிப்பா பாருங்க.

Friday, November 11, 2011

oouch sorry....

                நாம் எவ்வளோ தான் emglishla இல்ல தாய் மொழி இல்லாத வேற மொழிலையோ peter விட்டாலும் ஒரு ஆபத்து ,இல்ல பதட்டம் ,வலின்னு எதுவந்தாலும் நம்ம தாய் மொழில தான் கத்துவோம்.... கதறுவோம்.... கூப்பாடு போடுவோம்.... ஆனா இதுலயும் நான் கொஞ்சம் வித்தியாசம் எனக்கும் பதட்டமோ, இல்ல அவசரம்னு வந்த என் வைல தமிழே வரது என்னமோ மாயமோ என்ன கருமமொனு  தெரியல.. இது சில இல்ல பல சமயங்கள்ல நான் பாத்துட்டேன் அப்படி நான் அவசரத்துல, பதட்டத்துல.... ஒளர்ண ஒளறல் கொஞ்சமா சொல்லறேன் ...
                      முன்னாடி  சொன்ன மாதிரி என் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போக இந்திரா நகர் வழியா அடையாறு வரைக்கும் நடக்கணும் கிட்டத்தட்ட ஒரு 5 kms நடக்கனும்னு வெச்சிகோங்களேன் நானும் மஞ்சுவும் முன்னாடி நடந்து போய்டே இருந்தோம் பின்னாடி தன,சமு,சங்கீதா வந்துட்டு இருந்தாங்க சாமு முன்னாடி வேகமா வந்து "ஹே ஒரு பைத்தியம் கல்லால அடிக்கறான் நு சொன்ன பின்னாடி பாத்த அந்த பைத்தியம் அவளுங்க மேல கல்ல தூக்கி போட்டுட்டு இருந்துச்சு,நான் சுறு சுறுப்பா கொஞ்சம் முன்னாடி நின்னுட்டு இருந்த  traffic police கிட்ட  போய்" போலீஸ் unlce  போலீஸ் uncle  அந்த mad  எங்க மேல கல்லு போடுறானு".... ஏதோ LKG புள்ள rhymes  ஒப்பிக்கரா மாதிரி சொன்னேன் நான் சொன்ன விஷியத்த விட்டுட்டு நான் அத சொன்ன விதத்த கேட்டு என்னோட friend  மஞ்சுவும் அந்த போலிசும் செமையா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.அதுல இருந்து நான் யார கலாய்க்க  ஆரம்பிச்சாலும்  "போலீஸ் uncle  போலீஸ் uncle " நு என்ன ஓட்டி தள்ளிடுவாளுங்க.
                      Recenta இப்போ office ku  வந்துட்டு இருக்கும் பொது போரூர் சிக்னல்la இந்த பக்கம் ஒரு பெரிய கார் அந்த பக்கம் ஒரு lorry  நடுவுல நான் என்னோட வண்டில, வந்து நிக்கும் போதே lorry crossa   தான் வந்து ninuchu சிக்னல் விழுந்த ஒடனே lorry  மொதல்ல எடுத்தான் அவன் முன்னாடி போக போக என்னோட scootya  இடிச்சிகிட்டே போறான் கடைசி wheel  போகனும்ன என்னோட வண்டிய நசுக்கிட்டு தான் போகணும் அந்த உயிர்  போற நேரத்துல கூட " ஹே ஹே lorry stop stop nu " கத்துறேன் நல்லவேள அவன் நிறுத்தினான் இல்ல நான் scootyoda  நசுங்கி செத்து இருப்பேன் .இந்த  incidenta ஆபீஸ்ல சொல்லும் பொது கூட எல்லாரும் "எங்க அந்த நேரத்துல கூட நீங்க lorrykaran  கிட்ட இங்கிலிஷ்ல தான் பேசி இருக்கீங்க " கிண்டல் பண்ணாங்க .
                          இந்த மாதிரி ஒண்ணு இல்லங்க ரெண்டு இல்ல நெறைய comedy நடந்து நான் comedy peice ஆகி இருக்கேன். இன்னைக்கு காலைல கூட  gatela இருந்து பால் பக்கெட் எடுத்துட்டு திரும்பும் பொது ஒரு கால மிதிச்சிட்டேன் யார் கால்ட நு " oouch sorry" !!! nu சொல்லிகிட்டே திரும்புறேன் ஒரு தெரு நாய் ஓடுது எனக்கே ரொம்ப அவமானமா போச்சு..... இத சதீஷ் கிட்ட சொன்ன நாய்க்கெல்லாம் சாரி சொன்ன ஒரே ஆள் நீயா தான் d இருப்ப.... எப்போ தான் நீ இப்படி ஓட்ட இங்கிலிஷ்ல பேசுறத விட போரியோனு எப்பவும் போல என்ன அசிங்க படுத்தினாறு.

Thursday, November 10, 2011

SMS....

நாம எதேர்சையா டிவி ல பாக்குற பாட்ட  இருக்கட்டும் இல்ல ஏதோ ஒரு படமா இருக்கட்டும் மொதலா நமக்கு ஞாபக படுத்தறது அதோட நமக்கு ஓடிகிட்டு இருக்கற memories தான்.எப்பவுமே எனக்குள்ள ஒரு சேரன் alerta  இருக்கான்னு நெனைகதீங்க இது சோக கதலாம் இல்ல. Special occasionla + special person கூட பாத்த சூப்பர் படம்னா கண்டிப்பா நம்ம மனசுல நீங்க எடம் புடிச்சி தானே இருக்கும் .அப்படி எனக்கு ரொம்ப புடிச்ச படம் தான் SMS( சிவா மனசுல சக்தி).இந்த படம் ஒரு valentines day ku  தான் ரிலீஸ் ஆச்சு correcta  சொல்லனும்ன 2009 feb 14th .அந்த வருஷம் தான் நானும் சதீஷும் புருஷன் பொண்டாட்டி ஆகி வர மோதல் valentines day   எதாச்சும் speciala  செய்யணும் நெனச்சிட்டு இருந்தேன் . valentines day வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி எனக்கும் அவருக்கும் செம சண்ட வந்துடுச்சு (வழக்கம் போல).சண்டனா சாதாரன சண்ட இல்ல கொழ அடி சண்டைய விட மோசமான சண்ட, போச்சு valentines day வாது மண்ணாவது அவ்வளோ தான் சண்டையோட வீரியம் எப்படியோ 1 மாசத்துக்கு வரும் போல இருக்கே என்ன பண்ணலாம் நு யோசிச்சிட்டு இருந்தேன் வழக்கம் போல பொண்ண பொறந்த நாம தானே விட்டு குடுக்கணும் (rascals என்ன சிரிப்பு அங்க கத சொன்ன கதைய மட்டும் கேக்கணும் நமுட்டு சிரிபெல்லாம் சிரிக்க கூடாது )மனச தேத்திகிட்டு first compromise  படலத்துல எறங்கினேன்.மொதல்ல ஒரு ரோஸ் bouquet அனுப்பினேன் ரெண்டு பெரும் ஒரே ஆபீஸ்ல தான் வேல பாத்தோம் இருந்தாலும் suprisinga  இருக்கட்டுமேனு தான்.அதுலையே கொஞ்சம் மலை ஈரின சாமி இறங்கிடுச்சு. அப்புறம் feb 14th   அன்னைக்கு leave apply பண்ணேன், சரி அன்னைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்ச பொது தான் சரி அப்போ எதாச்சும் படம்  release  ஆகுதான்னு பாத்து SMS படத்துக்கு சத்யம் தியேட்டர்ல ticket  புக் பண்ணேன். படம் பாத்துட்டு வயத்துக்கு கொட்டிக போணுமே எப்பவும் போல கண்ட எடத்துக்கு போகாம எதாவது romantic resturant  போலாம்னு netla  தேடி தேடி city centrela இருக்கற roof top resturant LEVEL 4 2 table  புக் பண்ணேன்live music band வேற இருக்குனு சொன்னான்.

                என்னமோ எல்லாம் செட் ஆகி  வந்துச்சு எப்பவும் போல காலைல grocerry shopping முடிச்சிட்டு மதியானம் வீட்டுக்கு வந்து சமச்சி சாப்டுட்டு  மணி ஆகுது கேளம்புங்கனு சொன்னேன் எங்க கெளம்பனும் பீச் போலமனு கேட்டாரு இல்ல ஒரு எடத்துக்கு போறோம் கேளம்புங்கனு சொன்னேன் .ஏதோ கேளபுங்கனு சொல்றாளே கேளம்புவோம்னு இல்லாம எங்க போறோம் ?எங்க போறோம்? நு நாச மாதிரி கேள்வி மயிலாப்பூர் போங்க சொனேன் . ஒடனே நான் எங்க ஆமா வீட்டுக்கு தான் போக சொல்ல்றேனோ நு நெனசிகிட்டு எதுக்கு நாம அங்க போறோம் நு ஒரு cross question  வேற அய்யோ கேள்வி கேகம bikea ஓட்டுங்க நு சொல்லி ஒரு வழிய நுங்கம்பாக்கம் வரும் பொது wills lifestyle  போனும் சும்மா t-shirt  பாக்கனு சொன்னாரு சரி போவோம் போனோம் அப்பாவும் பேசாம டிரஸ் எடுக்காம எங்க போறோம் நாம சொல்லு ....சொல்லுனு....சப்பா சத்யம் தியேட்டர் போறோம் போதுமா சொன்ன ஒடனே..."ஹே ticket எல்லாம் கெடைக்காது   இப்போ nu ரொம்ப புத்திசாலி தனமா சொன்னாரு அப்போ தான் சொனேன் நான் ஏற்கனவே ticket  புக் பண்ணியச்சுனு". நான் ரெண்டு பேருமே movie buff so  அவர் செம thrill ஆயிட்டாரு.Moreover SMS மாதிரி ஒரு ஜாலியான படம் வேற செம குஷி ஆயாச்சு. Actually அது எந்த மாதிர்யான படம்னு தெரியாமையே நான் டிக்கெட் புக் பண்ணேன் நல்ல வேல படம் நல்ல இருந்துச்சு நன் தப்பிச்சேன்.
                   படம் பத்தாச்சு அப்புறம் வயத்த நேரப்ப போணுமே வாங்க போலாம்னு சொனேன் எங்க சரவ பவன் போலாமா இல்ல பொன்னுசாமிய வழக்கம் போல கேட்டாரு இல்ல அதுக்கும் ஒரு எடம் வெச்சி இருக்கேன் வாங்கனு சொனேன் எங்க d போனும்னு கேடறு நேர city centre  விடுங்க வண்டியன்னு சொனேன். சொன்னது தான் மாத்திரம் குயோ முய்யோ காத்த அரம்பிச்சிடாறு அங்க என்ன இருக்கு KFC & pizza corner  தான் இருக்கு எனக்கு செமைய பசிக்குது அங்கலம் நான் வர மாட்டேன்னு nu ... அவர ஒரு வழியா compromise பண்ணி கூட்டிட்டு போறதுக்குள்ள நான் பட்ட அவஸ்த்த இருக்கே அய்யோ அய்யோ ....actually அங்க level 4 nu resturant  இருக்கறது நெறைய பேருக்கு தெரியாது ...so it was a real suprise for him.Rooftop ,beach view ,candle lite dinner ...live musci band nu  வேறனு செம ambience.Buffet so அவர் பசிக்கும் சாப்பாடு பிரச்சன இல்ல .Washroom ku போறேன்னு சொல்லிட்டு அந்த band  கிட்ட போய் என்னோட  all time fav  brain adamsoda " everything I do " songa சதிஷ்காக  வாசிச்சு dedicate  பண்ண சொனேன்.They did the same ....Its was a one worthy moment to spend the bucks.

விடாது கருப்பு vs விட்டுவிடு கருப்பா

                        Generally ஒரு novela படமாவோ இல்ல சீரியல்lavo  திரை வடிவத்துல அதோட மெருகு குலையாம கொண்டு வரது ரொம்ப கஷ்டம்.Screenplay ku ஏத்தா மாதிரி சில மாற்றங்கள் செய்யறேன்னு கதையோட கருவையே கொன்னுடுவாங்க.கத புக்ல படிக்கும் பொது சில பத்திரங்கள நம்ம மனசுல ரொம்ப பெரிய தாக்கத்த  உண்டு பண்ணி இருக்கும். அவங்க மேல நமக்கு தனி அபிப்ப்ரயமே வந்துடும் கத அப்படின்ற விஷியத்த தாண்டி நம்ம மனசுக்குள்ள இந்த இந்த character  இப்படி இப்படி nu ஒரு உருவம் கற்பன பண்ணி வெச்சி இருப்போம் அதையெல்லாம் நேர்த்தியா கொண்டு வர சாமர்த்தியம் ஒரு சிலருக்கு தான் உண்டு.அப்படி மிகவும் வெற்றிகரமா original   novela விட அந்த சீரியல் தாங்கி வந்த விறுவிறுப்பு..... சுவாரஸ்யம்.....பாத்திர படைப்புன்னு நம்மள அசரடிச்சது விடாது கருப்பு .

                     விட்டுவிடு கருப்பாnu இந்திரா சௌந்தரராஜன் எழுதின  novel தான் விடாது கருப்புன்னு மர்மதேச seriesla  ரெண்டாவது   storya வந்துது.இங்க novel ஒசத்தியா இல்ல அந்த சீரியல் ஒசத்தியா nu arguement இல்ல ஒரு அருமையான மர்ம  கதைய ஒரு extraodinary thinker & director  கிட்ட ஒப்படச்சா அது திரைல எவ்வளவு  அழகா விறு விறுப்பா பண்ண முடியும்றதுக்கு பெரிய உதாரணம் இந்த சீரியல.விட்டுவிடு கருப்பா படிச்சவங்களுக்கு தெரியும் நான் என்ன சொல்லறேன். இந்த சீரியல் la பத்திரங்களோட basic characterisation ye   வித்தியாச படுத்தி இருப்பாரு  நாகா.மொதல்ல  கதையின் நாயகி ரீனால இருந்து வருவோம்
கதை படி ரீனா முற்போக்கு சிந்தனையோட இருந்தாலும் அவளோட dressing முறை எல்லாம் கொஞ்சம் tradintionala  இருக்கும் ஒரு இடத்துல  IS  "சேலைய இடுப்புல சொரிகிகிட்டு நடந்தா ரீனா நு சொல்லி இருப்பாரு " ஆனா சீரியல் படி ரீனாdressing லையும் ஒரு modern பெண் தான் அவ அணிஞ்சmaximum traditional dress na   அது சல்வார் கமிஸ் தான்.Novela ரீனாவுக்கும் ராஜேந்திரன் மேல காதல் பூக்குற மாதிரி   வரும் ஆனா seriala  எந்த ஒரு எடத்துலயும் ராஜேந்திரன ரீனா விரும்பவே இல்ல.சீரியல் la ரீனா ku ஒரு சோக பின்னணி இருக்கும் கதைய விட சீரியல் ரீனா பல மடங்கு powerful nu நான் நெனைக்கறேன்.
ராஜேந்திரன் - இந்த ஒரு பாத்திர படைப்பு தான் யாரோட மூளை நு தெரியல IS & நாகா சேந்து இந்த charactera  பண்ணி இருக்கலாம்.novela ராசு ரொம்ப தெரியசாலியா காமிச்சு இருப்பாங்க ஆத்திகமும் இல்லாம நாத்திகமும் இல்லாம நடுல இருப்பான் .ஆனா சீரியல் ராசு கடவுள் நம்பிக்கை உடையவன் .அதுலயும் கருப்பசாமி நிதி நிலைநாட்டுதுனு நம்பகூடியவன் . இந்த character  குள்ள split personalitya  ஒளிச்சு வெச்சி,அந்த correcta lose ends  இல்லாம flashbackoda connect பண்ணி ஒரு terrora create  பண்ணி இருப்பாங்க.
வாத்தியார் வரதராஜன் : கதைப்படி வாத்தியார் தான் கருப்பு ஆனா சீரியல் அப்படி இல்ல கதை முடிவுல வாத்தியார் தன்னையும் கொன்னுட்டு வேஷத்த கலச்சிடுவாறு ஆனா சீரியல் வந்ததோ வேற.
வெள்ளிநாச்சி சிவகாமி - novela இவங்க ரெண்டு பெரும் தான் பொன் பானை நகைங்கள மறச்சி அதா காப்பாத்திட்டு வருவாங்க ஆனா சீரியல் படி இவங்களோட characterization  ரொம்ப ரொம்ப விதியாசம இருக்கும்.Infact இப்படி எல்லா charactersum  ரீனாவோட professor  நந்தா , பிரம்மன் ,கட்டையன்,பூசாரி,சண்முகம் , ரத்னவோட காதலன்  அரவிந்த் நு கிட்ட தட்ட எல்லா பத்திரங்களும் நெறைய வித்யாசங்கள பத்து இருந்துது இன்னும் சொல்ல போன கதைய விட சீரியல் la இன்னும் ரொம்ப ஆழமா,அழுத்தமா இருந்துச்சு.வெறும் பாத்திர படைப்புல மட்டும் இல்லாம இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷங்களா கூட்டி இருப்பாரு டைரக்டர் உதரணத்துக்கு பொன் பானை நகைங்களுக்கான விடுகதை, Dr.நந்தாவோட கல்வெட்டு ஆராய்ச்சி , split personality concept nu எராளமான ஒரு மர்ம சீரியல்ku  தேவை படும் விஷயங்கள் . சீரியல் பாத்த அப்புறம் கதைய படிக்கறவங்களுக்கு சீரியல் ரொம்ப சூப்பர் நு சொல்லதோணும் கதைய படிச்சிட்டு சீரியல் பாக்குறவங்களுக்கு சீரியல்  excellent nu சொல்ல தோணும்.ஏனோ IS & நாகா இப்போலாம் கூட்டு சேந்து சீரியல் பண்றது  இல்ல.I am just expecting another spine chilling series from the duo IS & NAGA.

Thursday, November 3, 2011

correctana தப்பு

                       மனைவி  அமைவது மட்டும் இல்லங்க friends  அமையறதும் கடவுள் குடுத்த வரம் .நாம நல்ல friends select பண்ணனோம் நாம தப்பிச்சோம் இல்ல அவ்வளோ தான் நாம காலி அழிஞ்சோம் . Freinds  கூட சேந்து தான் இவன் குடிக்க கத்துகிட்டான் அவன் கூட சேந்து தான் இவன் ரொம்ப ஊர் சுத்துறான் நு சொல்லற அம்மா ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி. இப்போ யாரும் யாரையும் கெடுக்கறது இல்ல அவங்க அவங்கலவே தான் தன்னோட பாதைய select பண்றாங்க. அப்புறம் என்னப்பா நல்ல friends  கெட்ட friends  நு கேகுறீங்களா.
                          Luvers குள்ள சண்டன்ர பேர்ல நடக்குற comedya  விட  friends குள்ள நடக்குற கூத்துக்கள் ஜாஸ்தி.அதுல பாதி சரியான மொக்க விஷியங்கள்.எப்பவுமே நல்லா திண்டு மாதிரி இருக்கற என்னோட தங்கச்சி நல்லா ஒடம்பு இலச்சி போய் இருந்தா . என்ன நித்யா இப்படி  எலச்சிட எனக்கும் அந்த  diet plana சொல்லேன் நானும் கொஞ்சம் எலைக்குறேன் சொன்னதுக்கு," நான் சொல்லுவேன் ஆனா நீங்க யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா சரி சொல்லு  எதுக்கு இவ்வளோ  build up தரன்னு சொல்லி கேட்டா எனக்கும் என்னோட friendsukum  சண்ட அதுல சாப்டாம இருந்து தான் எலசிட்டேன் சொன்ன எனக்கு செம கடுப்பு ஆயிடுச்சு freinds கூட பேசாம இருந்தா சாப்ட கூடாத..... என்ன ஒரு லூசு தனம் இது.தன்ன தானே வருத்திக்க வெக்க கூடிய எந்த ஒரு relationshipum useless  தான் nu என்னோட அபிப்பராயம்.
                            வெறும் காதல்ல மட்டும் poseesiveness இல்ல infact friendshipla தான் ரொம்ப ஜாஸ்தி.... இவ எனக்கு Hi சொல்லல, என் பிறந்த நாளைக்கு first wish  பண்ணால, இன்னைக்கு என் கூட வராம அவ கூட போயிட்டா இந்த மாதிரி அல்ப விஷியங்கள் பல.இந்த கருமம் possessivenessa  பத்தி பேச ஆரம்பிச்சா அதுக்கு தனி poste  எழுதலாம் அதா விடுவோம்.எனக்கு எப்பவுமே friends ராசி கெடையவே கெடையாது.நான் நல்லா ஒருத்தர் கூட mingleஆயிட்டே வருவேன் திடீர்னு எதாவது பிரச்சன ஆயிடும் இல்ல அவங்க  வேற ஸ்கூல் போய்டுவாங்க, நம்ம கூடவே ஒட்டுன்னிங்க மாதிரி இருக்கறது எதுவும் நமக்கு ஒத்து வராது.இது ஒரு பக்கம் இருக்க என்னோட இன்னொரு ராசி என்னன்னா........ நான் எப்பவுமே  தப்பான friendsa  தான் தேடி போய் நட்ப்பு வேச்சிப்பேன் எல்லாம் என் கெரக நேரம்.தப்பான friends nu  சொன்ன ஒடனே நீங்க தண்ணி, தம் nu  நெனைக்காதீங்க.சில பேர் நம்ம கூடவே இருந்துட்டு நமக்கே குழி பறிப்பாங்க அனா நம்ம முன்னாடி இந்த பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருப்பாங்க.ஆனா இந்த மாதிரி ஆசாமிங்க எதுக்கு நமக்கு நல்லா  freinds மாதிரி நடிக்கணும் அது தான் நம்ம மனசுக்குள்ள ஓடுற கேள்வி பதில் இல்லாத கேள்வி.எனக்கு இந்த மாதிரி பல கசப்பான அனுபவங்கள் இந்த மாதிரியான freinds  மூலமா  sorry ஆசாமிங்க  மூலமா நடந்து இருக்கு. 
                             பேர் சொல்ல விரும்பாத என்னோட கூட படிச்ச friend  எனக்கு அடுத்த roll number அவ...... இதுனாலையே  நாங்க நல்லா freinds ஆனோம்னு தான் சொல்லணும் அடிப்படைல அந்த பொண்ணும் நானும் chalk & cheese characters  ஆனா ஏனோ எனக்கு அவல ரொம்ப புடிக்கும் may be  அவளோட அந்த அமைதியான குணமா கூட இருக்கலாம்.இப்படி  அடுத்தடுத்த இருக்கற roll numberla ஒரு 7  பேர் நல்லா friends  ஆனோம் .நாங்க 7 பெற இருந்தாலும் எனக்கு என்னமோ அவல மட்டும் தான் ரொம்ப புடிக்கும் எப்பவும் போல அவளுக்கும் என்ன மட்டும் தான் புடிக்கணும் லூசு மாதிரி நானும் அப்போ அப்போ நெனைப்பேன் ஆனா என்ன பெத்தத தவிர என்னோட அம்மா.... அப்பா.... வேற எந்த பாவமும் செய்யாததுனால அந்த புண்ணியத்துல நான் என்னையே  அப்போ அப்போ self analyise பண்ணிப்பேன்.அதுனால ரொம்ப லூசு தனமாthink பண்ணாம கொஞ்சம் தப்பிச்சேன்.ஆனா எனக்கு வந்த பிரச்சன possessiveness  இல்ல, நான் யார ரொம்ப விரும்பி நேனோ அந்த பொண்ணு என்ன பத்தி எங்க gang friends கிட்டயே தப்பு தப்பா சொல்லி இருக்கறது பின்னாடி தான் எனக்கு தெரிய வந்துது.அவ நல்லா நேரம் இது எல்லாம் எனக்கு தெரிய வந்த பொது நாங்க காலேஜ் முடிச்சி இருந்தோம்.இல்லனா மட்டும் நான் என்ன கிழிச்சி இருப்பேன்னு கேக்குறீங்களா, ஒன்னும் கிழிக்க முடியாது தான்.ஆனா  அவ ஏன் என்ன பத்தி தப்பு தப்பா எல்லார் கிட்டையும் சொன்னானது தெரிஞ்சிக்கலாம்ல.இது மட்டும் இல்லாம என்ன பத்தி எப்படி மத்தவங்க கிட்ட சொன்னாலோ அதே மாதிரி அவங்கள பத்தியும் என் கிட்ட தப்பு தப்பா சொல்லி இருந்தா.அவ ஏன் அப்படி செஞ்சான்னு எங்களுக்கு இது நாள் வரைக்கும் தெரியல நாங்களும் அவ கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க விரும்பல எனக்கு என்னமோ அவ என்னோட முதுகுல குத்தினா மாதிரி இன்னும் சின்ன வலி இருக்கு.இது ஒரு பெரிய பண ஏமாத்தோ, இல்ல பித்தல மாத்தி வேலையோ இல்ல ,ஆனா என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு நம்பிக்கை  துரோகம் தான்.
                       இப்படி  இவ ஒருத்தி மட்டும் இல்ல இன்னும் பல பேர் கிட்ட இப்படி  தான் நான் செம அடி வாங்கி இருக்கேன் ஒரு வேல அவங்களோட இயல்பே அது தானோ, நான் தான் தப்பானவங்க கூட சகவாசம் வேச்சிகிட்டேனோ அப்படியே இருந்தாலும் என்ன புடிக்கலன புடிக்கலன்னு சொல்லிடு போய் இருக்கலாம் அதா விட்டு எதுக்கு என் கூட  இருந்துகிட்டே எதுக்கு எனக்கு குழிப்பரிக்கணும். நாம எப்பவுமே கைல இருக்கற வைரத்த விட்டு கூழன்கல்ல பொருக்கரதுல தான் ஆர்வம் காட்டுவோம் அதே மாதிரி சில நண்பர்கள் நம்ம கூடவே இருப்பாங்க கூடவே பயணிப்பங்க ஆனா நம்ம மனசு  அவங்கள ஒருபோதும் கண்டுக்கவே கண்டுக்காது.இன்னைக்கு அந்த மாதிரி என்கூடவே இருந்து நான் கண்டுக்காம இருந்தா அந்த சில நண்பர்கள் தான் இப்பவும் என்கூட இருக்காங்க.எனக்கு எந்த பிரச்சனையும் குடுக்காம .
                         என்ன பொறுத்த மட்டில் நானா தேடிபோற எந்த ஒரு  relationshipum எனக்கு workout ஆனது இல்ல அதுனாலயே யாரையாச்சும் புடிச்சே இருந்தாலும் ஒரு Hi யோட முடிச்சிக்கறேன். நம்மளோட சாப்பாடு மட்டும் இல்ல நமளோட  friendsum நம்ம கூட இருக்கணும்னு விதிக்கப்பட்டவங்க தான் நம்ம பயணத்துல கொஞ்ச தூரம்னாலும்  வராங்க மத்தவங்க எல்லாம் தடம் தெரியாம காணாம போய்டுறாங்க.

Wednesday, November 2, 2011

சின்ன பூ .....

ரொம்ப நாலா எனக்கு புடிச்ச நடிகைய பத்தி எழுதணும் யோசிச்சிட்டே இருந்தேன் எப்படி எழுதினாலும் அது மகேஷோட "ஆஷா கேளுன்னியோட " inspiration ஜாஸ்தி இருந்துச்சு. Cha இது நமக்கு சரி பட்டே வராதுன்னு விட்டுட்டேன் . சரி கொஞ்சம் try  பண்ணி தான் பாப்போமே யோசிச்சேன் இதோ உங்களுக்கு இதுல எங்கியாச்சும் ஆஷா கேளுன்னி post  ஞாபகம் வந்த அதுக்கு நான் பொறுப்பு இல்லப்பா.....



                                எல்லா perioldlaiyum ஏதோ ஒரு நடிகையோட ஆதிக்கம் தல தூக்கி இருக்கும் அப்போ மினால் மாதிரி ஒரு புது முகம் அறிமுகம் ஆவாங்க. அந்த புதுமுகத்துக்கு நேரம் நல்லா இருந்தா பெரிய நட்சத்திரமா ஜோளிப்பங்க .இப்படி அம்பிகா, ராதா, நு தமிழ் சினிமா குட்டை பாவாடைல மூழ்கி இருக்கும் பொது தான் அந்த மின்னல்  நதியான்ர பெர்ல வந்துச்சு.
                            எனக்கு நதியா விருப்பம் ஆனது பூவே பூச்சுடவா படத்துல தான் . யாருக்கு தான் அந்த படம் புடிக்காது . அந்த படத்த நான் பாத்தது  என்னவோ ஸ்கூல் படிக்கும் பொது தான். அத பாக்கும்  பொது ஒரு படம் differenta  எடுத்து இருக்காங்கனு மட்டும் புரிஞ்சிது .அந்த படம் எடுத்த location  ஆகட்டும், இல்ல ஹீரோ வே இல்லாம ஒரு படம், அதுவும் துரு துரு நு ஒரு பொண்ணு 4 பசங்களோட சைக்கிள் ஓடிட்டு jollya  பாக்கவே ரொம்ப refreshinga  இருந்துச்சு .மாநிறமா  இருந்தாலும் அழகான முகம் அளவான உடல் வாகுனு 80's la  பசங்க  மனசுல நீங்கத எடம் புடிச்சவங்க நதியா .
                         ராதாவோட அதீத glamourla  சொக்கி இருந்த மக்களுக்கு நதியா ஒரு பெரிய refreshing breeze  தான் .பாக்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நதியா ஒரு துரு துரு சுட்டி பெண்ணா ரேவதிக்கு அப்புறம் மக்கள் மனசுல எடம் புடிச்சாங்க.இவங்களோட plus pionte   அவங்களோட dressing sense ..... Modern dress na அதுல கண்டிப்பா கவர்ச்சி இருக்கனும்ற எண்ணத துள் துள் ஆக்கினவங்க.  80's சோடா fashion iconu  தான் இவங்கள சொல்லணும்.
                    அந்த timela எங்க அம்மா வேல பாத்துட்டு இருக்கும் பொது நதியா வே ஒரு பெரிய brandam .நதியா பொட்டு, நதியா கம்மல், நதியா வளையல் நு அவங்களால பல plastic companies  வழ்துச்சு  nu  தான் சொல்லணும்.நதியா - சுரேஷ் ஒரு ஹிட் pairne  சொல்லலாம் they complimented each other well.ஹீரோஸ் ஜாஸ்தி dominate பண்ணிட்டு இருந்த timela கூட தனக்கு weight age  இருக்கற  rolesa பாத்து செலக்ட் பண்ணி நடிச்சாங்கலாம்.ஏதோ ஒரு பேட்டில படிச்சேன் மௌன ராகம் இவங்க நடிக்க வேண்டிய படமாம் dates  இல்லாததுனால ரேவதிக்கு போயிடுச்சாம்.
                நம்ம த்ரிஷா மாதிரி தொடர்ந்து கலை சேவை புரிஞ்சி ரசிகர்களே அம்மா பொது உன் மூஞ்சிய எவ்வளோ நாள் தான் பாக்குறதுன்னு சொல்ல வெக்காம தன்னோட peakla she retired .கொஞ்ச படமே நடிச்சாலும் கச கச நு இல்லாம neata  நடிச்சிட்டு போய்ட்டாங்க .நதியா தனக்கு எப்படி ஒரு sytle  வெச்சி இருந்தாங்களோ அதே மாதிரி தான் நடிக்க வரும் போதே தன்னுக்கு  ஒரு காதலன் இருக்காறுனும் அவர தான் கல்யாணம் பண்ண போறேன்னும் publica starting of the careeryare சொன்ன ஒரே நடிகை எனக்கு தெரிஞ்சி இவங்க தான் நு நெனைக்கறேன். திகட்ட திகட்ட glamour  இருந்த காலத்துல நல்லா கண்ணியமா நடிச்சிட்டு தென்றல் மாதிரி போனாங்க.யாருப்பா அந்த நடிகை நு கேக்குற அளவுக்கு 80's நடிகைகள் எல்லாம் ஊதி போய் இருக்கும் பொது நதியா இன்னும் காலேஜ் பொண்ணு மாதிரி சிக்குன்னு இளமையோட இருக்காங்க .
             எனக்கு personala நதியாவ புடிக்க காரணம் அவங்க கிட்ட இருந்த sytle quotient.She lights up the screen .அவங்க கிட்ட naturalave ஒரு youthfulness இருக்கு.she changed the perception of being modern without being vulgar .I hope & pray that  she gets more powerful roles & have beautiful life .

மின்பிம்பங்கள் .....

இந்த வார்த்தைய கேட்ட ஒடனே எனக்கு ஞாபகம் வரது எல்லாமே கே.பலச்சந்தேரோட சீரியல் தான். இந்த சீரியல் culturea முதல் முதல்la start  பண்ணது எனக்கு தெரிஞ்சி கே.பி தான் . எனக்கு DDla  வந்த எந்த ஒரு சீரியல் lum பெருசா ஞாபகம் இல்ல உடல் பொருள் ஆனந்தி ,மேல் மாடி கலி தவிர அத கூட  நான் பத்தது எல்லாம் இல்ல என்னோட class mates  சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் . அப்புறம் கே.பி மெதுவா கேபிள் டிவி அதாவது அப்போ வந்த சன் டிவி கு தாவின பொது அவர் எடுத்த மோதல் சீரியல் "கையளவு மனசு " .
                           இந்த சீரியல் startingla  இருந்து முடியற வரைக்கும் ஒரு  episode குட தவற விடாம எங்க அம்மா பத்தது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு .இந்த சீரியல்  la புடிச்ச விஷியமே அதோட  title song தான்,அந்த பாட்டு ரொம்ப  catchya நல்லா இருக்கும் .அந்த drama la குடும்ப கஷ்டம் தாங்காம பசங்கல கீதா தத்து குடுக்கும் பொது எங்க அம்மா நீயும் சேட்டை பண்ண உன்னையும் இப்படி தான் தத்து குடுத்துடுவேன் நு சொல்லி என்ன பயமுறுத்தி இருகாங்க.... அதுல வர அந்த கடைசி குட்டி தீபிகா வ பாத்து நான் ஏன் இவ்வளோ அழகா இல்லன்னு ஏங்கி  வேற இருக்கேன்.அப்புறம் காதல் பகடை,ப்ரேமி nu நெறைய சீரியல் கே.பி productionsla இருந்து  வந்தாலும் என்ன மட்டும் இல்லாம தமிழ் நாட்டையே கட்டி போட்ட ஒரு சீரியல் சீரீஸ் na அது "மர்மதேசம்" தான்.


                           ஆரம்பத்துல ரகசியம் nu தொடங்கி நெறைய பேரால பாக்கபடாத ஒரு ரொம்பவும் நல்ல சீரியல். நாங்க என்னமோ அது முடியற நேரத்துல இருந்து தான் பக்க ஆரம்பிச்சோம் ரொம்ப interestinga இருந்துச்சு .நம்ம ஊருக்கு சீரீஸ் மாதிரி type ரொம்ப ரொம்ப புதுசு அதுவும் ஒரு வித புது அனுபவம் தான் . இந்த சீரீஸ்  எல்லாமே மர்ம கதைகள் அதுனாலயே வியாழ கெழமை ஆனாலே கரெக்டா பாத்துடுவோம் .இந்த மர்மதேசம் சீரீஸ் la ரொம்ப ஹிட் நாடகம் na அது விடாது கருப்பு தான் . குதுரை ,கருப்பு,அரிவாள் வெட்டு, இதுக்கு நடுல துப்பறியும் பெண் ரொம்ப வித்தியாசமா எலாரையும் கட்டி போட்ட சீரியல் அது .விடாது கருப்பு வந்த பொது நான் ஒரு 4th std படிச்சிட்டு இருந்தேன் அதோட  விறு விறுப்பு புடிச்ச புரிஞ்ச எனக்கு அந்த split personality concept  கொஞ்சம் புரியல அப்புறம் அத rajshri.com la தேடி பத்த பொது I could understand it.
                        இதுக்கு நடுல teleflims nu  மினி சினிமா எடுத்தாங்க சன் டிவி, அப்போ அதுக்காக கே.பி எழுதி இயக்கினது தான் காதல் ஒன்று வாங்கி வந்தேன்.Ooty backdropla set ஆனா இது ஒரு romcom variety இதுல நடிச்ச அந்த அக்கா ,ஜெய் கணேஷ் கேரக்டர் அப்புறம் குட்டி தீபிகா இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு..... எவ்வளோ தேடியும் கெடைக்காத அந்த title song உள்ளபட எல்லாமே அருமை .                கே.பி சன் டிவ்க்கும் சண்ட வந்து அவர் ராஜ் டிவி  ku தாவி ஜன்னல் series, காசளவு நேசம்,ரமணி vs ரமணி - 2 nu  மாதிரி சீரியல் la நெறைய புது முயற்ச்சிகள் பண்ணிட்டு இருந்தாரு.ஜவ்வு மாதிரி  seriala இழுக்காம இரத்தின சுருக்கமா வாரம் ஒரு சீரியல் nu ராஜ் டிவி la  வந்துட்டு  இருந்துச்சு.இந்த, வாரம் ஒரு சீரியல் எனக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு மோகன் ராம்  & இதயம் நல்லெண்ணெய் சித்ரா நடிச்ச சீரியல் out and out comedy serial with good twist & turns .இவ்வளோ நல்ல சீரியல் குடுத்த கே.பி ye பின் நாள்ள அண்ணி ,சாந்திநிலையம் மாதிரி தலைவலி தர கூடிய மெகா சீரியல் பக்கம் போனது தான் வருத்தம்.ஒரு வேல கே.பி இந்த சீரியல் culturea start பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு தமிழ் நாட்டுல பல அம்பிளங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கெடச்சி இருக்குமோ,நம்ம வீடு எழவு வீட  மாறாம இருந்திருக்குமோ என்ன பண்ண விதி வலியது.....இது கே.பி எனென்ன சீரியல் எடுத்து இருக்காருன்னு கணக்கெடுக்க இல்ல கழுத தேஞ்சி கட்டெறும்பான கத மாதிரி தான் இந்த சீரியல் கதையும். கே.பி ஒன்னும் revolutionary  சீரியல் எடுக்கல ஆனா அதே நேரம் வீடே சேந்து ஒப்பாரி வெக்கற மாதிரி இப்போ வர மகா மட்டமான சீரியல் lum  நிச்சயமா எடுக்கல.இப்போ சீரியல் ra பேர்ல கண்ட கருமத்த எடுத்துகிட்டு இருக்கற ஒவ்வொரு  directorum தயவு செஞ்சி நான் மேல சொன்ன எதாச்சும் ஒரு  dramava  பாருங்க அப்புறம் நீங்க எல்லாம் குற்ற உணர்ச்சில direction பக்கமே வரமாடீங்க .

Tuesday, November 1, 2011

மழையே மழையே ......

 சென்னைல இருகறவங்களுக்கு smilea கொண்டுவர நெறைய விஷியங்கல்ல மழையும் ஒன்னு . ஏன்ற கரணம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல காஞ்சி போய் கெடக்கற எடத்துல நல்ல மழை பெஞ்சா சந்தோஷம் தானே.மழைனலே பல விதமான mixed reactionsa பாக்கலாம்  ஸ்கூல் காலேஜ் போறவங்களுக்கு leave nu ஜாலி ,அம்மா கு துணி காயாதுனு கவலை,வேலைக்கு போறவங்களுக்கு அய்யோ இந்த office ku இந்த climatela ya கேளம்பனுமேனு எரிச்சல் ,.இப்படி  பல emotions   மழையோட connect  ஆகி இருக்கும். எனக்கு மழைன ரொம்ப....... ரொம்ப......... ரொம்ப...... புடிக்கும் அதுவும் மழைல நெனையறதுன cha chance இல்ல.... மழைல நெனயறது யாருக்கு தான் புடிக்காது .மழைன்னு சொன்னாலே அதா ஒட்டி வர நியபகங்களுக்கு பஞ்சமே இருக்காது அதுல mostly  இனிமையான,happy memories  தான் இருக்கும் .
                      சின்ன வயசுல எல்லாரும் போல மழை வந்தா ஸ்கூல் லீவ் ஒரு பெரிய bedsheeta  பொத்திட்டு TV முன்னாடி ஒக்கந்துக வேண்டியது அப்போ அப்போ யாராச்சும் மழைல ஆட்டம் போடுறங்கலானு நோட்டம் விட்டுட்டு செஞ்சி வெச்சி இருக்கற பேப்பர் கப்பல தண்ணில மேதக்க விட்டுட்டு ஓட்டிடுவேன் .என்னோட சின்ன வயசுல மழை நாள்ல பஜ்ஜி எல்லாம் சாப்ட ஞாபகம் இல்ல சாயங்காலம் நல்ல சூடான டீ குடிச்ச ஞாபகம் தான் இருக்கு.
                            வளந்த அப்புறம் பெரிய மழை ஞாபகம் சொன்ன அது 2005 la வந்த பெரிய புயல் மழை தான். சென்னையே 3 நாள் அல்லோல பட்ட மழை அது....current cut  ஆகி இருட்டுலையே மூழ்கி இருந்துது சென்னை .அப்போ பாத்து தான் எங்க காலேஜ் ல  semester practicals  நடந்துட்டு இருந்துச்சு ,அன்னைக்கு Microprocessor practicals  எங்களுக்கா மழை வேற....practicals...  வேற exam இருக்குமா இருக்கதானே தெரியல நான் படிச்சு காலேஜ் வேற Govt college so போன் பண்ணலாம் எடுக்க மடங்க என்ன பண்றது தெரியாம எங்க  gang...  discuss பண்ணி ஒரு வழிய நாங்க காலேஜ் போறதுன்னு முடிவு பண்ணோம்.ரோடு எல்லாம் செம வெள்ளம் ஒரு பஸ் கூட இல்ல ஏதோ கெடச்ச பஸ்ல தாவி ஏறினா நம்ம ஊர் பஸ் நல்ல நாள்லயே நாயகம் இதுல மழைல கேக்கவா வேணும் .....ஒரு பக்கம் அப்படியே பேப்பர் கப்பல் மாதிரி சாஞ்ச வண்ணம்...... பஸ்ல ஆள் என்னமோ இல்ல இருந்தாலும் பஸ் லட்சணம் அப்படி கண்டக்டர் வேற இந்த மழைல எங்க போற பாப்பா காலேஜ் நு சொல்லிடு ஊர் சுத்த போரியனு கடுப்ப கெளப்பிட்டு இருந்தான் .
                   அங்க போனா நமக்கு முன்னாடி ஒரு  20 பேர் ஒகந்து இருக்காளுங்க ஒருவேள nighte  வந்து படுத்து இருபளுங்கலோ ஆனாலும் அவங்கலாம் ரொம்ப தான் sincere சிகாமணிங்க. ஒரு வழிய practicalsa முடிச்சிட்டு வீட்டுக்கு கேளம்பலம் நு கேளம்பின இந்த  பாழா போன மழை விட்ட பாடு இல்ல நாங்க தரமணி la இருந்து இந்திரா நகர் வழிய அடையாறு டேபோ வரணும் நடராஜா service  தான் .செம வெள்ளம் தெர்மாகோல் மாதிரி மேடந்துடே வந்தோம்.

                       எனக்கு பாட்டு இல்லாம மழை கெடையாது மழைல நெனஞ்சலோ ,இல்ல மழையே பாத்தாலோ நான் ஒடனே பாட்டு பட ஆரம்பிச்சிடுவேன் public placela இருந்தா  முணுமுணுக்கவாது செய்வேன்.அப்படி மழை பாட்டுனே நான் ஒரு  4-5  பாட வெச்சி இருக்கேன்.ex "மழை வருது மழை வருது குடை கொண்டு வா" , "மழையே மழையே இளமை  முழுதும் ","ஓஹோ ஓஹோ மேகம் வந்தது", "மழை மழை என் உலகத்தில வருகின்ற முதல் மழை" .....இப்படி கொஞ்சம் பெருசு.எனக்கு மழைல செய்ய புடிக்கும் விஷயங்கள் சிலது இருக்கு அதுல ஒன்னு ரெண்டு நான் செஞ்சும் இருக்கேன் .....உதரணத்துக்கு மழை பெய்யும் பொது பைக் ஓட்டவோ இல்ல பைக்ல பின்னாடி ஒக்காந்து போறதுன ரொம்ப பிடிக்கும்,அப்புறம் மிதமான சாரல் மழைல la train ஜன்னல்  seatla ஒக்காந்து  கிட்டு விகடன் படிக்க புடிக்கும் .முழுசா நெனஞ்சி ஈரம் கஞ்சும் காயமலும் இருக்கும் பொது டீ கடைல நின்னு டீ குடிக்க புடிக்கும்(bajji is default).அப்புறம் மொட்டை மாடில நின்னு மழைய ரசிக்கறது புடிக்கும்.மழை நாள்ல எவ்வளவோ சங்கடங்கள் இருந்தாலும் மழை nu சொன்ன ஒடனே நமக்குள்ள பொதஞ்சி போய் இருக்கற நம்ம குழந்தை தனம் கண்டிப்பா ஒருதடவையேனும் வெளிய வரும் நான் இப்போ மழைல நெனைய போறேன் :))