Monday, November 14, 2011

Jane do na....


போன வெள்ளிகேழமா வரைக்கும் எதுன்னு the best onscreen romantic jodi nu கேடீங்கன அது சூரியா - ஜோதிகா இல்ல கமல் - ரேவதி எதாச்சும் ஒரு ஜோடிய சொல்லி இருப்பேன் ஆனா இப்போ எந்த ஜோடி ரொம்ப ரொமாண்டிக் ஆனா ஜோடி நு கேட்ட என்ன பொறுத்த வரைக்கும் அது அமிதாப் - தபு தான்.
             ரொம்ப நாளா பாக்கணும்னு நெனச்சு  friday அன்னைக்கு ஆபீஸ்ல திருட்டு தனமா பாத்த படம் தான்  Cheeni Kum அமிதாப், தபு  நடிப்புல  2007வருஷம் ரிலீஸ் ஆனா படம் தான் இது. தன்னோட அப்பாவ விட வயசான ஒரு cook  மேல தபுக்கு காதல்.... எப்பவுமே வேல வேல நு சரியான சிடு மூஞ்சியா இருக்கற அம்பிதாப் காதல் வயப்பட்டு 64 வயசுல செய்யற குசும்பு ரொம்ப ரொம்ப சூப்பர்.இந்த படத்த விட என்ன ரொம்ப ஈர்த்தது இந்த படத்துல வர பாட்டு .நம்ம ஊர் இளையராஜா தான் மியூசிக் மொதல்ல இந்த படத்தோட பாட்ட கேக்குறவங்களுக்கு அட !அப்படின்னு தான் தோணும் என்ன எல்லா பட்டுமே தமிழ் ஹிட்டான 80's மெலடி பாடல்களோட  tune தான்.

            அப்படி இருந்தும் எது என்ன ஈர்த்தது இந்த படத்துல வர " jane do na " song   நம்ம நூறாவது நாள் படத்தோட "விழியிலே மணி விழியிலே" tune  தான்னு இருந்தாலும் அதோடpicturisation . இந்த பாட்ட ஸ்ரேயா கோஷல்  கோரல்லா கேக்கும் பொது ஒரு melting  மைசூர்பாக் சாப்டுற மாதிரி அவ்வளோ ஒரு சுகம் .காதல்வய படும் ஒருத்தன் தன்னோட காதலி கிட்ட என்ன குறும்பு சேட்டை செயவ்வனோ அதை எல்லாம் அமிதாப் இந்த வயசுல செஞ்சி பாக்குறது ஒரு வித சுவாரஸ்யம் தான் . ஒரு சீன்ல தபுவும் அமிதாபும் கண்ணாலையே காதலா அவ்வளோ ரொமாண்டிக்கா பகிர்ந்துப்பங்க.
       தபு கிட்ட "I wanna make love to you"அத எங்க பண்ணலாம் நு மண்ணடி போட்டு கேக்கும் எடத்துல amitabh is so much in luv....தூண்ல வெச்சி இருக்கற தபுவோட வெரல சீண்டும் போதும் ... தபுவையே ரசிச்சிட்டு இருக்கற சீன்....அப்படின்னு நெறைய சீன் சொல்லலாம் எல்லாமே அருமை இது  அமிதாபோட " One of the THE BEST PERFORMANCE". இது எல்லாமே என்னோட காதல் நாட்டகள எனக்கு நினைவு படுத்துச்சு..... கண்ணால பேசிக்கறது ......திருட்டுதனமா கைய புடிக்கறது ...... ஒரு ஓதட்டு சுழிப்பு cha i wanna fall in luv again....நேரம் கெடச்சா இந்த பாட்ட  youtubela கண்டிப்பா பாருங்க.

1 comment:

Unknown said...

Great minds think alike :-)