Friday, November 11, 2011

oouch sorry....

                நாம் எவ்வளோ தான் emglishla இல்ல தாய் மொழி இல்லாத வேற மொழிலையோ peter விட்டாலும் ஒரு ஆபத்து ,இல்ல பதட்டம் ,வலின்னு எதுவந்தாலும் நம்ம தாய் மொழில தான் கத்துவோம்.... கதறுவோம்.... கூப்பாடு போடுவோம்.... ஆனா இதுலயும் நான் கொஞ்சம் வித்தியாசம் எனக்கும் பதட்டமோ, இல்ல அவசரம்னு வந்த என் வைல தமிழே வரது என்னமோ மாயமோ என்ன கருமமொனு  தெரியல.. இது சில இல்ல பல சமயங்கள்ல நான் பாத்துட்டேன் அப்படி நான் அவசரத்துல, பதட்டத்துல.... ஒளர்ண ஒளறல் கொஞ்சமா சொல்லறேன் ...
                      முன்னாடி  சொன்ன மாதிரி என் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போக இந்திரா நகர் வழியா அடையாறு வரைக்கும் நடக்கணும் கிட்டத்தட்ட ஒரு 5 kms நடக்கனும்னு வெச்சிகோங்களேன் நானும் மஞ்சுவும் முன்னாடி நடந்து போய்டே இருந்தோம் பின்னாடி தன,சமு,சங்கீதா வந்துட்டு இருந்தாங்க சாமு முன்னாடி வேகமா வந்து "ஹே ஒரு பைத்தியம் கல்லால அடிக்கறான் நு சொன்ன பின்னாடி பாத்த அந்த பைத்தியம் அவளுங்க மேல கல்ல தூக்கி போட்டுட்டு இருந்துச்சு,நான் சுறு சுறுப்பா கொஞ்சம் முன்னாடி நின்னுட்டு இருந்த  traffic police கிட்ட  போய்" போலீஸ் unlce  போலீஸ் uncle  அந்த mad  எங்க மேல கல்லு போடுறானு".... ஏதோ LKG புள்ள rhymes  ஒப்பிக்கரா மாதிரி சொன்னேன் நான் சொன்ன விஷியத்த விட்டுட்டு நான் அத சொன்ன விதத்த கேட்டு என்னோட friend  மஞ்சுவும் அந்த போலிசும் செமையா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.அதுல இருந்து நான் யார கலாய்க்க  ஆரம்பிச்சாலும்  "போலீஸ் uncle  போலீஸ் uncle " நு என்ன ஓட்டி தள்ளிடுவாளுங்க.
                      Recenta இப்போ office ku  வந்துட்டு இருக்கும் பொது போரூர் சிக்னல்la இந்த பக்கம் ஒரு பெரிய கார் அந்த பக்கம் ஒரு lorry  நடுவுல நான் என்னோட வண்டில, வந்து நிக்கும் போதே lorry crossa   தான் வந்து ninuchu சிக்னல் விழுந்த ஒடனே lorry  மொதல்ல எடுத்தான் அவன் முன்னாடி போக போக என்னோட scootya  இடிச்சிகிட்டே போறான் கடைசி wheel  போகனும்ன என்னோட வண்டிய நசுக்கிட்டு தான் போகணும் அந்த உயிர்  போற நேரத்துல கூட " ஹே ஹே lorry stop stop nu " கத்துறேன் நல்லவேள அவன் நிறுத்தினான் இல்ல நான் scootyoda  நசுங்கி செத்து இருப்பேன் .இந்த  incidenta ஆபீஸ்ல சொல்லும் பொது கூட எல்லாரும் "எங்க அந்த நேரத்துல கூட நீங்க lorrykaran  கிட்ட இங்கிலிஷ்ல தான் பேசி இருக்கீங்க " கிண்டல் பண்ணாங்க .
                          இந்த மாதிரி ஒண்ணு இல்லங்க ரெண்டு இல்ல நெறைய comedy நடந்து நான் comedy peice ஆகி இருக்கேன். இன்னைக்கு காலைல கூட  gatela இருந்து பால் பக்கெட் எடுத்துட்டு திரும்பும் பொது ஒரு கால மிதிச்சிட்டேன் யார் கால்ட நு " oouch sorry" !!! nu சொல்லிகிட்டே திரும்புறேன் ஒரு தெரு நாய் ஓடுது எனக்கே ரொம்ப அவமானமா போச்சு..... இத சதீஷ் கிட்ட சொன்ன நாய்க்கெல்லாம் சாரி சொன்ன ஒரே ஆள் நீயா தான் d இருப்ப.... எப்போ தான் நீ இப்படி ஓட்ட இங்கிலிஷ்ல பேசுறத விட போரியோனு எப்பவும் போல என்ன அசிங்க படுத்தினாறு.

No comments: