Tuesday, December 15, 2015

Trail room.....

குண்டாவும் கொஞ்சம் சதை பிடிப்போடும் இருக்கற எல்லாரும் ஏதோ ஒரு pointla நாம குண்டா இருக்கோம் நு remba feel  பண்ணி இருப்போம் .
சில பெருக்கு அனுஷ்காவ பாத்தா தோணும் இல்ல சில பேருக்கும் கண்ணாடிய பாக்கும் பொது எல்லாம்... தோணும் எனக்கு இந்த trailer roomsa  பாத்தா தோணும் .
எனக்கும் இந்த trail roomkum  ஏழாம் பொருத்தம் தான் ரொம்ப வருசமாவே  நான் குண்டா தான் இருக்கேன்..... ஆனா என்னமோ இந்த trail  ரூம் குள்ள போய் அங்க இருக்கற கண்ணாடில பாக்கும் பொது எனக்கே என்ன பாக்க கொஞ்சம் பயமா தான் இருக்கும்.அதா விட மஹா கடுப்பு என்னனா தேடி தேடி நல்ல அழகா எதாச்சும் டிரஸ் எடுத்துகிட்டு போன சொல்லி வெச்சா மாதிரி சனி எனக்கு அது செட்டே ஆகாது. இன்னைக்கோ நாளைக்கோ நு இருக்கற கெழவன் இழுக்கறா மாதிரி இழுக்க வேண்டி இருக்கும்.
இதெல்லாம் 2013 வர உள்ள கத ஆமாங்க ஆமா பக்குன்னு பெருத்த குட்டியா இருந்த நன் சிக்குன்னு சிறுத்த குட்டியா  மாறுன கத தான் இது ;)

2013 மார்ச் மாசம் , எனக்கு எப்போமே பல்லு கொஞ்சம் முன்னாடி இருக்கறா  மாறியே நான் பீல் பண்ணுவேன் actually  அப்படிலாம் கிடையவே கிடையாது நு கற்பூரம் அடிச்சி சத்தியம் பண்ணுவாங்க என் அம்மா ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்  குஞ்சு தானே ) .ஆனா உண்ணம  என்னன்னா எனக்கு பல்லு கொஞ்சம் தூக்குன மாறி தான் இருக்கும் கண்ணீர் விட்டு கதறி கால்ல விழுந்து டென்டிஸ்ட்  கிட்ட பல்லுக்கு clip  மட்ட போய்ட்டோம் ஹையா ஜாலி ரொம்ப நாள  இருந்த ஒரு insecurity கு குட் bye . 4 பல்லு புடுங்கி ,clip  மாட்டி பேசவே முடியாத படி வீட்டுக்கு வந்தேன் .கிளிப் மாட்டுறது  ஒரு மட்டேரே இல்ல அதுக்கு அப்புறம் குடுப்பாங்க பாருங்க ஒரு to -do லிஸ்ட்  ஆங்க வேப்பாங்க ஆப்பு .

டெய்லி 2வேளை ப்ருஷ் பண்ணனும் - ஓகே
எலும்பு  கடிக்க கூடாது - ஓகே
சில fruits avoid பண்ணனும் -ஓகே
முடிஞ்சா ரைஸ் avoid பண்ணனும் - சூப்பர் இதுவும் ok
snacks கண்டிப்பா தோடவே கூடாது - டபுள் ஓகே

இத தவிர வேற எத வேணா சாப்டலாம்   hm... கொஞ்சம் confused a  தான் இருந்தேன் அப்புறம் பல்பு எரிஞ்சுது ஹையா  liquid food ! அதாங்க ஜூஸ் .
நானா விருப்ப பட்டு ஜூஸ் குடிச்சது போக என்னால ஜூஸ் மட்டும் தான் குடிக்க முடியும் நு ஒரு stage, அப்போ அப்போ ஜுரம் வந்தா கூட சப்டாத ரவ உப்பமாலாம் சாப்டேன் ( இல்ல முழிங்கினேன்). மாச மாசம் டென்டிஸ்ட்ta போய் clip tight வேற  பண்ணிக்கணும் அது  ஒரு மரண வலி வலிக்கும் பாருங்க ப்பா .
எப்படியோ  மாசம் போச்சு பலூன் மாதிரி இருந்த நான் nylon கயரு மாதிரி ஆயிட்டேன் . எத்தனையோ வருஷம் ஒடம்பு எளைகாத nu ஏங்கிட்டு இருந்த நான் ஆத்தா  நான் பாஸ்  ஆயிட்டேன் மாதிரி மக்களே நான் இளசிட்டேன் !!!!!! YES ( wimbeldon வின் பண்ண  serena williams  பீல்  இது ) . என்னோட பழைய ஜீன்ஸ் கூட தொள தொள நு இருந்துச்சு .
heyyyy என்ன பா  இப்படி இளசிட்ட nu friends colleagues எல்லாம் கேக்கும் பொது கெடைக்கற ஒரு பீல் அதெல்லாம் தியானம்  மாறி அனுபவிச்சி இருந்தா  தான் தெரியும் .

கிளிப் போடுறதுக்கு முன்னாடி 76 இருந்து 65 அப்படியே 60 போனேன்
2014 end ல நான் கிளிப் remove பண்ணேன் ஒரு கட்டத்துல ரொம்ப இளசிட்டேன் nu நானே பீல் பண்ணி கொஞ்சம் வெயிட் போட்டேன் .
அப்புறம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெயிட் போட்டு இப்ப கெரகம் 68 கு வந்துட்டேன்.
 ஆனா விஜய் பட dialouge மாதிரி " முழிச்சிட்டேன் விடமாட்டேன் " :).



No comments: