Wednesday, October 19, 2011

நினைவில் நின்றவை 70's - 1

நாம எவ்வளோ படம் பாத்தாலும் நம்ம மனசுக்குள்ள பச போட்ட மாதிரி ஒட்டிகறது சில படங்கள் தான் அதுவும் அந்த படங்கள  ரெகார்ட் தேயற அளவுக்கு பாத்தாலும் நமக்கு அலுக்கவே அலுக்காது அப்படி எனக்கு புடிச்ச ரெகார்ட் தேஞ்ச சில பல  70's la  வந்த  படங்கள பத்தி பாப்போம்...... ஏதோ நான் பாப்போம் நு சொன்ன ஒடனே நான் என்னமோ அறிவு ஜீவி திரை பார்வை மதன் மாதிரியோ இல்ல, சினிமா விமர்சனம் அருமையா எழுத கூடிய என்னோட பிரண்ட் மகேஷ் மாதிரியோ நு நினைக்காதீங்க சாமி சத்தியமா எனக்கு அதெல்லாம் சுத்தமா தெரியாது நமக்கு தெரிஞ்ச சினிமா ஜில் ஜங் ஜக் expansion  உங்களுக்கே தெரியும் சூப்பர் படம்  - ஓகே படம்  - படு மொக்க படம் அவ்வளோ தான். நான் பார்து இன்னும் பாத்துகிட்டு இருக்கற சில படங்களை பற்றி...



எதிர்நீச்சல்(1968) :
இந்த படத்த பத்தி மகேஷ் கிட்ட ஒரு poste எழுத சொன்னேன் அந்த அளவுக்கு நான் இந்த படத்தோட செம luver .  நாகேஷ்,முத்துராமன்,ஜெயந்தி,மேஜர் சுந்தர்ராஜன்.. பல அருமையா நடிகர்கள் நடிச்ச நம்ம KB  direct பண்ண படம் இந்த படத்த எப்பவும் போல முதல் முதல்ல நம்ம பொதிகைல தான் பாத்தேன் அப்புறம் பல தடவ இந்த படத்த rajashri.com la பாத்து இருக்கேன். இந்த படத்த பாக்கும் பொது ஒரு positive energy  என்னக்குள்ள create ஆகும். சீர்காழி கோவிந்தராஜன் குரல்ல " வெற்றி வேண்டுமா போடு பாரடா எதிர்நீச்சல்" பாட்ட கேக்கும் பொது கண்டிப்பா ஒரு தெம்பு பிறக்கும் .


காசே தான் கடவுளடா(1972):
தேங்காய் ஸ்ரீநிவாசனோட The best performance nu  தான் சொல்லணும் முத்துராமன், ஸ்ரீகாந்த்,லக்ஷ்மி,மனோரம்மா,வெண்ணிறாடை மூர்த்தி, சுருளி ராஜன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்ச படம்.அதே அதே சபாபதே  nu  பணத்த கொள்ளியடிக்க அவங்க போடுற plans   எல்லாம் செம hilarious இந்த படத்த எழுதி  direct பண்ணது சித்ராலய கோப்பு ,he is one of the best writer in tamil cinema.

காசி யாத்திரை(1973):
இந்த படம் அதிகம் பிரபலம் இல்ல VK ராமசாமி ,மனோரம்ம,ஸ்ரீகாந்த்,சுருளி ராஜன்,சோ நடிச்ச படம் இந்த படத்துக்கு என்னமோ ஸ்ரீகாந்த் தான்  official heroஆனால் படத்தோட உண்மையான hero & heroine  நம்ம VKR & மனோரம்மா தான். மனோரம்மா இந்த படத்துல dual role  பண்ணி இருப்பாங்க. ஒரு சந்நியாசி எப்படி ஒரு நாடக காரி மேல ஆச பட்டு அவங்க சதி கும்பல்ல சிக்கி அவஸ்த்த படுறாரு அது தான் இந்த படத்தோட  main plot.இந்த  நடககாரிய படத்துல  வர மனோரம்மாவோடbody language extremely superb....

வா ராஜா வா:
 இந்த அப்படம் எந்த வருஷம் release  ஆச்சுனு எனக்கு தெரியல அப்போ master பிரபாகரன் ரொம்ப famous  கிட்ட தட்ட எல்லா படத்துலயும் பிரபாகரன் இருபாரு. எல்லா child artist போல அதிகப்ரசங்கி தனம் இருந்தாலும் ஒரு innocence  இருக்கும் பிரபாகரன் கிட்ட.... இந்த படத்தோட ஹீரோ master  தான் மகாபலிபுரத்துல tourist guidea இருக்கற சின்ன பையனுக்கு ஒரு சிற்பி friend .அந்த சிற்பி கிட்ட இருக்கற ஒரு கல்லுல செதுக்க பட்டு இருக்கும்  பழமொழிகள் அந்த பையன் வாழ்க்கைல அனுபவ படமா நடக்கும் இது தான் படத்தோட கதை சுருக்கம்.நான் இந்த படத்த school படிக்கும்  பொது பாத்தேன், so என்ன இந்த பட ரொம்ப attract பண்ணிடுச்சு  A.P Nagarajan direct பண்ண படம் இது.

கலாட்ட கல்யாணம்(1968)
சிவாஜி கணேசன் முதல் முதல ஜெயலலிதா கூட  ஜோடி போட்ட படம் . 4 பொண்ணுங்களுக்கு பையன் பத்து வெச்சிட்டு தானும் தன் காதலிய கை புடிக்க பாடுபடும் hero va பத்தின கதை.இந்த படத்துல சிவாஜி,நாகேஷ்,முத்துராமன்,கோபாலகிருஷ்ணன்,தங்கவேலு,சோ அந்த காலத்துல வந்தmulti start cast movie.இது ஒரு typical comedy entertainer ரகம்.

நான்:
ரவிச்சந்திரன்,ஜெயலலிதா,நாகேஷ்,மனோரம்மா நடிச்ச படம். பல கோடி ருபாய் சொத்துக்கு வாரிசு யார்  nu நடக்கற போட்டி தான் படம்.மனோகர் , நாகேஷ்,ரவிச்சந்திரன் இந்த மூணு பெரும் அந்த சொத்துக்கு போட்டி போடுறாங்க யார் உண்மையான வாரிசு கண்டுபுடிக்கறது தான் கதை நிறைய comedy கொஞ்சம் thrilling  nu படம் ரொம்ப நல்லாவே போகும் .

ரங்கா விலாஸ்:
VK ராமசாமி நடத்திடு இருக்கற lodgela  காசே குடுக்காம ஜெய்ஷங்கரும்  நாகேஷ் தங்கி lodege inmprove பண்றேன் பேர்வழி lodegela raid  நடக்க கரணம் ஆகிடுறாங்க . Police kitta சிக்கி lodge  கை  விட்டு போய்.. மனமும் போய்  நாகேஷையும் ஜெய்  yavum தேடு தேடு  தேடுறாரு இதுக்கு நடுவுல நாகேஷ் ஒரு பொண்ண காதலிச்சு கல்யணம் பண்ணி சந்தர்ப்ப சூழ்நிலையால தலைமறைவு வாழக்க வழராறு . நாகேஷ் செத்த மாதிரி  ஆவி ரூபத்துல வந்து VKR.... மிரட்டறது..... இந்த கூத்துக்கு நடுவுல  ஜெய் வாணிஸ்ரீ yin காதல் nu  இதுவும் செம comedy கலாட்ட

பாமா விஜயம்:
இந்த படத்த பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியது இல்ல அளவுக்கு அதிகமான ஆசை எவ்வளோ தப்பு  ரொம்ப அழக சொல்லி இருப்பாரு KB ஒரு நடிகையின் ( ராஜஸ்ரீ)  வரவுக்காக தகுதிக்கு மீறி செலவு செய்யும் மகன்கள் ( மேஜர் சுந்தர்ராஜன் , நாகேஷ், முத்துராமன் ) பேராசை படும்  மருமகள் ( ஜெயந்தி ,காஞ்சனா, சௌகார் ஜானகி ) குடும்பத்தை கட்டி காக்கும் மாமனாராக  பால்லையா ரொம்ப கருத்துள்ள நகைச்சுவை படம் .

இது மாட்டும் இல்ல இன்னும் எவ்வளவோ படங்கள் காதலிக்க நேரம் இல்லை,ஆயிரம் பொய்,அத்தையா மாமிய, நீ , உத்தரவின்றி உள்ளே வா,சுமதி என் சுந்தரி,ஊட்டி வரை உறவு,கண்காட்சி nu பல படங்கள் ஒவ்வொரு படத்த பாக்கும் போதும் ஒவ்வொரு ஞாபகம். ஞாபகத்த மீறி செம குஷி மனசுக்குள்ள வந்துடும். 











2 comments:

Unknown said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. நல்ல படத் தேர்வுகள்.. இருப்பினும் உங்களது சொந்த கருத்துகளை சேர்த்து எழுதீனீர்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் :-)

Unknown said...

sure kandipa unga points ellam mansula niruthi next time innum bettera try panren....