Wednesday, October 12, 2011

என் ஊர் - மயிலாப்பூர்

எல்லாருக்கும் தன்னோட சொந்த ஊர்னா ஒரு தனி பாசம் உண்டு  எனக்கும் தான்,அமாம் என்னோட சொந்த ஊர் எது? வேற எது நம்ம மயிலாப்பூர் தான்.நம்ம மக்களுக்கு மயிலாப்பூர் அப்படின்னு சொன்ன ஒடனே ஞாபகம் வரது மாமிஸ் தான் ஏன்பா மயிலாப்பூர் ல மாமிங்க மட்டும் தான் இருக்காங்களா? சரி அதா விடுவோம். நான் ரசிச்ச ரசிக்கற மயிலாப்பூர் பத்தி எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை அது இப்போ இங்க உங்களுக்காக .
                       சென்னைல எங்க இருக்கீங்கனு?  கேட்டு அதுக்கு மயிலாப்பூர் னு சொன்னாலே ஒரு தனி கிரேடு தான் . மயிலாப்பூர் is cultural hub of chennai . சென்னைல ரொம்ப traditional   ஆனா இடம் நா அது திருவேல்லிகேணி & மயிலாப்பூர் ஆனா திருவேல்லிகேணி மாதிரி ரொம்ப கச்ச கச்ச னு மயிலாப்பூர் இருகாது கொஞ்சம் காத்தோட்டமா அருமையா இருக்கும் .


mylaporela கபாலீஸ்வரர் கோவில விட அங்க இருக்கற டிபன் கடைங்க ரொம்ப famous தெருவுக்கு ஒரு டிபன் கடை இருக்கும் எல்லா அருமையா ஐயர் வீட்டு கை  மனத்தோட இருக்கும் .


          


             கோவில சுத்தி நாலு மாட விதி, சென்னை மாதிரி ஒரு மெட்ரோ நகரத்துல இன்னும் மாட வீதி,  கோவில் தெப்ப குளம் னு இருக்கறது மயிலாப்பூர் ல மட்டும் தான் nu  நினைக்கறேன். பங்குனி மாசம்  கபாலிக்கு நடக்குற உற்சவம் ரொம்ப famous அதுல கடைசி நாள் அறுபத்தி மூவர் திருவிழா தமிழ் நாடு முழுக்க பரிச்சியம். என்னோட நவராத்திரி ஞாபகம் எல்லாம் எங்க மாட வீதில நடக்க கூட  இடம் இல்லாம கொலு பொம்மைங்க விக்கும் அதா பாக்கவே பெரிய கூட்டம் கூடும் .
            என்னோட friends கிட்ட இல்லாத ஒன்னும் என் கிட்ட இருந்ததுன அது big time exposure to tamil culture. சத்யம் தேட்டர் இருக்கற அதே மயிலாப்பூர் ல பஜன சமிதி இருந்தது தான். மார்கழி மாசத்துல கலர் கலர் கோலத்துக்கே விடிய காலைல போட்டி போட்டு எழுந்துப்போம்.

 மயிலாப்பூர் ல  எங்க வீடு ரொம்ப பெருசா இருகாது ரயில் பெட்டி மாதிரி நீட்டமான தெருவுல தான் வீடு அனா எதிர்த்த வீடு மாமி பக்கத்துக்கு வீடு அக்கா, கோடி வீட்டு அத்தானு தான் இன்னும் பழகறோம் இந்த மாதிரி ஒரு அன்நோநியத்த  சொல்ல வார்த்தை இல்ல......குடு குடுபகாரன் முதல் டப்பா சீடி கடை வரைக்கும்  பழைய சென்னையோட அடையாளங்கள் இன்னும் மாறாம இருக்கு.
                   இன்னொரு மயிலாப்பூர் specialna அது மயிலாப்பூர் festival  எல்லா வருஷமும் jan 1st week  நடக்கும் sundaram finance  நடத்துற festival .Its is to preserve & celebrate our culture.4  நாள் மயிலாப்பூர் கல கட்டும் பாடு கச்சேரி, பரதநாட்டியம் , டிராமா , food stalls, கைவினை பொருட்கள் nu  சரவணா store விளம்பரத்துல சினேஹா சொல்லற மாதிரி எக்கச்சக்க சக்கம்.



மயிலாப்பூர் ல கபாலீஸ்வரர் கோவில் மட்டும் இல்லாம காரணீஸ்வரர்,மல்லேஸ்வரர் , வாலீஸ்வரர் , தீர்தபாளிஸ்வரர் ,வெள்ளிஸ்வரர், விருபக்ஷீஸ்வரர் னு ஏழு ஈஸ்வரர் கோவில் இருக்கு அது மட்டும் இல்லாம கேசவ பெருமாள் , மாதவ பெருமாள் னு வைணவ தங்கலங்களும் சாந்தோம் சர்ச், மசூதி னு கோவில் நெறைய இருக்கற இடம் .



மயிலாப்பூர் வெறும் கோவில் கோலம் மட்டும் இல்லாம நிறைய entertainment quotient  உள்ள ஒரு இடம் books  படிக்க, நிறைய  arts கத்துக்க எல்லா விதமான accessibility um    உள்ள ஒரு இடம் 
       
         பொதுவா இங்க பொறந்த அடுத்த பிறவி கிடையாது னு சொல்லுவாங்க ஆனா அடுத்த பிறவி இருந்தாலும் இங்கயே பிறக்கணும்.மயிலாப்பூர் a ரசிக்கணும்!!!

No comments: