Tuesday, October 25, 2011

மொட்டை மாடி ......

எனக்கு நெனவு தெரிஞ்சி 2002  வரைக்கும் எங்க வீடு ஓட்டு வீடு தான் அதுக்கு அப்புறம் தன மாடி வீடு கட்டினோம் . நான் சின்ன வயசுல இருக்கும் பொது எங்க தெருல 40% தான் மாடி வீடு மத்தது எல்லாமே ஓட்டு வீடு தான் . ஓட்டு வீடுன்னு சொன்ன ஒடனே நீங்க முத்தம், தாழ்வாரம் nu down southla  இருக்கற வீடு மாதிரி கற்ப்பன பண்ணாதீங்க... ஒரு பெரிய hall ,அப்புறம் ஒரு kitchen ,சின்ன வராண்டா அப்புறம் மாடு கட்டி வெக்க கொஞ்சம் பெரிய தொழுவம் அவ்வளவே தான் எங்க வீடு .எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு கோவில் வீடு so tradintional ஓட்டு வீடு   இருக்கற மாதிரி முத்தம்,தாழ்வாரம் நு நல்ல பெருசா இருக்கும்.
                 அப்போலாம் சும்மர் சீசொன்ல மட்டும் தான் கரண்ட் கட் பண்ணுவாங்க, கரண்ட் கட் ஆனா எல்லாரும் மொட்டை மாடிக்கு போவாங்க ஆனா நாங்க மாடி இல்லைனாலே வாசல் படிக்கு வந்துடுவோம்...
எப்படியோ கரண்ட் ஒரு 4 மணி நேரமாது கட் பண்ணுவாங்க home work   பண்றது, தெருவுல அந்த இருட்டுளையும் கண்ணாம்பூச்சி விளையாடுவோம் அப்புறம் ஒரு 8 மணி போல அம்மா சாப்பாடு உட்டிவிடுவங்க மாடில நிலவ பாத்துட்டு சாப்டுற மாதிரி வாசல் படில ஒக்காந்து நிலவ பாத்துடே சாப்டுவேன்.
         நான் ஒரு 8 std படிக்கும் பொது எங்க தெருல எல்லா வீடும் மாடி வீடு ஆயிடுச்சு சொல்ல போன இந்த பக்கம் மாடி வீடு அந்த பக்கம் மாடி வீடுnu எங்க வீடு மாட்டும் தான் ஓட்டு வீடு அப்போ கொஞ்சம் ஏக்கமா இருக்கும் ச்ச என்னடா இது நாம எப்போ தான் மாடி வீடு கட்டுவோம் ... நாமலும் எப்போ தான் மொட்ட மாடில நடந்திட்டே படிக்கறது,நிலவ பாத்து சாப்டுறது,படுக்கறது நு...
                 எங்க அத்தை வீட்டுக்கு  summer leave ku போவேன் அவங்க வீடு பெரிய மாடி வீடு அத்த எங்களுக்கு சமச்சி சப்பட மாடிக்கு கொண்டு வந்துடுவாங்க நாங்க சுத்தி ஒக்காந்து சாப்பிடுவோம் அப்போலாம் என்னோட அந்த சின்ன அல்ப மாடி ஆசை கொஞ்சம் அடங்கும்..பாய விரிச்சி படுத்து stars a பாத்துகிட்டு எல்லாம் கதையும் நானும் என்  cousinsum  பேசுவோம்.வீடுன்றது வெறும் கட்டடமா இல்லாம நம்மள ஒருத்தரா இருந்துச்சு அது தான் என்னோட மாடி ஏக்கத்துக்கு இரு பெரிய காரணம் நெனைக்கறேன் இப்போ மாடி வீடு இருக்கு ஆனா அதா ரசிக்க நேரமும் இல்ல ரசிக்கற அந்த குழந்தை மனசும் இல்ல infact மாடிக்கு போறதையே ஒரு பெரிய வேலையா நெனைக்கறோம்.
          Recenta வந்த பாடல்கள நான் அடிகடி முணுமுணுக்கும் songna அது அங்காடி தெரு படத்துல வர "கதைகளை பேசும்  விழி அருகே "  ........ பாடல் ....... especially அதுல வர அந்த வரி " வெறும் தரையில் படுத்து கொண்டே விண்மீன் பார்ப்பது யோகமடி" ஏனோ இந்த வரிய கேக்கும் பொது  i get emotional.இந்த பாட்ல வராமாதிரி life  அவ்வளோ simplea....easya.... இருந்த எவ்வளோ நல்ல இருக்கும்

1 comment:

Unknown said...

Nice recollection of the "modernisation" phase of our lives... நான் எப்போ கடைசியா எங்க வீட்டு மொட்டை மாடிக்கு போனேன்???? நீங்க சொல்ற மாதிரி முன்னாடி மொட்டை மாடி என்றால் ஒரு தனி சந்தோஷம் தான்... ஆட்டம் போட்டு, கீழே வீட்டிலே சத்தம் கேட்குதுன்னு அப்பா காத்த, இருந்தாலும் பரவாயில்லைன்னு நுணி விரல்ல ஓடின காலமெல்லாம் எனக்கும் ஞாபகம் வருது... டி.வி வந்து நம்ம வாழ்க்கையை சீரழிச்சதுக்கு முன்னாடி நம்ம வாழ்க்கையிலே மொட்டை மாடி, பக்கத்து வீடு, தெரு வாசல் எல்லாமே ஒரு தினசரி அங்கமா இருந்திருக்கு :-)